)
Pahalgam Terrorist Attack: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் நகரில் உள்ள பைசரன் புல்வெளி பகுதியில் நேற்று முன்தினம் (ஏப். 22) நடந்த பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.
Pahalgam Attack: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்
அட்டாரி - வாகா எல்லை மூடல், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய அறிவிப்புகள் மத்திய அரசு வெளியிட்டது. தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பாளரை அழைத்து சம்மன் அளித்துள்ளது, மேலும் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மற்றும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களில் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்போது 55 இல் இருந்து 30 ஆக குறைக்கப்படும் என்றும் வரும் மே 1ஆம் தேதியில் இருந்து இந்த எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
Pahalgam Attack: பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை
இதை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த பதற்றமான சூழலில், இந்தியா அதன் முப்படைகளும் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல், பாகிஸ்தான் தனது கராச்சி கடற்பகுதியில் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் ஏவுகணை சோதனையை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Pahalgam Attack: Ex அமெரிக்க அதிகாரி தாக்கு
இது ஒருபுறம் இருக்க, பகல்காம் பயங்கரவாத சம்பவத்தை தொடர்ந்து, முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி மைக்கெல் ரூபின் என்பவர், தற்போதைய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை கடுமையாக சாடியிருக்கிறார். மேலும், அசிம் முனீரை அவர் மறைந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமா பில் லேடன் உடன் ஒப்பிட்டும் பேசியிருக்கிறார்.
முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரியான மைக்கெல் ANI ஊடகத்தில் பேசியபோது,"ஒசாமா பின்லேடனுக்கும் அசிம் முனீருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒசாமா பின்லேடன் குகையில் வாழ்ந்தார். அசிம் முனீர் அரண்மனையில் வசிக்கிறார். ஆனால் இருவரின் முடிவும் ஒன்றாகவே இருக்க வேண்டும்" என கடுமையாக தாக்கி உள்ளார்.
Pahalgam Attack: பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி இதுதான்
மேலும் "பஹல்காம் தாக்குதலுக்கு ஒரே பதில், பாகிஸ்தானை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாகவும், அசிம் முனீரை பயங்கரவாதியாகவும் அமெரிக்கா முறையாக அறிவிப்பதுதான்" என்றார்.
மேலும் அவர் கூறியதாவது,"ஜம்மு காஷ்மீர் பகல்காம் தாக்குதல் எதேச்சையானது என்று பாசாங்கு செய்யக்கூடாது. அது பன்றிக்கு லிப் ஸ்டிக் போடுவதை போல ஏற்றுக்கொள்ளவே முடியாத சமாளிப்பாகும். தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டத்தையும் கவனிக்க வேண்டும், இதேபோல் ஒருமுறை பில் கிளிண்டன் இந்தியா சென்றபோது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அதேபோல், தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் இந்தியப் பயணத்தில் இருந்து கவனத்தைத் திருப்ப பாகிஸ்தான் விரும்புவதாக தெரிகிறது" என்கிறார். இதன்மூலம் அவர் பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு அதிகமாக இருப்பதாக உறுதிப்பட கூறுகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ