மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கண்டிவாலியில் குடியிருப்பு சங்கம் ஒன்றில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய தகவல் வெளியாகி அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்த போலி தடுப்பூசி முகாம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த பெண், போலி அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதாகவும் மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர். 


கோரேகாவ் (Goregaon) தடுப்பூசி மையத்துடன் தொடர்புடைய  குடியா யாதவ் என்ற பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் பல சுற்று விசாரணைகள் நடத்தப்பட்டப் பிறகு கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Also Read | தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


தனியார் மருத்துவமனை பெயரில், போலியாக கோவிட் -19 தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்து மோசடி செய்ததாக குடியா யாதவ் மீது Hiranandani Heritage Residents Welfare Association என்ற குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் புகார் அளித்தனர்.  மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் அந்த வீட்டு சங்கத்தின் உறுப்பினர்களை ஏமாற்றியதாக குடியா யாதவ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான தரவுகள் எதுவும் கோ-வின் (Co-WIN portal) போர்ட்டலில் காணப்படவில்லை என்றும், 'தடுப்பூசி' போட்ட பின்னர் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் வெவ்வேறு மருத்துவமனைகளின் பெயரில் இருப்பதாகவும் கண்டறிந்ததன் பிறகு இந்த புகார் கொடுக்கப்பட்டது. 


நானாவதி மருத்துவமனை, லைஃப்லைன் மருத்துவமனை மற்றும் நெஸ்கோ கோவிட் முகாம் என்ற பெயரில் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மும்பையின் வெர்சோவா மற்றும் கார் (Versova and Khar) பகுதிகளிலும் போலி தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்ததாக புகார்கள் வந்துள்ளன.


Also Read | இந்தியாவில் இதுவரை சுமார் 40 டெல்டா பிளஸ் திரிபு வைரஸ் பாதிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR