)
FASTag Annual Pass: தனியார் கார், ஜீப் மற்றும் வேன்கள் ஆகியவற்றுக்கான வருடாந்திர பாஸ்ட்டேக் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. வருடாந்திர பாஸ்ட்டேக் சேவையை பெறுவதற்கான முன்பதிவை மத்திய அரசு நேற்றே தொடங்கியது.
பாஸ்ட்டேக் கணக்கில் நீங்கள் ரீசார்ஜ் செய்துவைத்துக் கொண்டால், உங்கள் வாகனங்கள் தானாகவே ஸ்கேன் செய்யப்பட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீடிய நெடிய கூடத்தில் நிற்க தேவையில்லை. அந்த வகையில், இந்த வருடாந்திர பாஸ்ட்டேக் திட்டம் குறித்து இங்கு காணலாம்.
பாஸ்ட்டேக் வருடாந்திர பாஸ் என்பது கார், வேன்கள், ஜீப்கள் என வணிகம் சாராத தனியார் வாகனங்களுக்கு வழங்கப்படும். முன்கூட்டியே ரீசார்ஜ் செய்துகொண்டு அதில் இருந்தே கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித தடை இன்றி பயணிக்கலாம், மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் தேவையும் ஏற்படாது. ஆனால், இந்த வருடாந்திர பாஸ் என்பது தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலை சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். மாநில அரசுக்கு சொந்தமான அல்லது தனியார் சுங்கச்சாவடிகளில் பயன்படுத்த முடியாது.
Rajmarg Yatra என்ற செயலி மூலம் நீங்கள் பாஸ்ட்டேக் வருடாந்திர பாஸை பெற்றுக்கொள்ளலாம். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக்கத்தின் இணையதளங்களிலும் இந்த பாஸை பெறுவதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் உங்களது வாகனம் மற்றும் பாஸ்ட்டேக் கணக்கை இணைக்க வேண்டும். அதன்பிறகு, சுமார் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் கட்டணம் செலுத்திய 2 மணிநேரத்தில் இது செயல்பாட்டுக்கு வரும். இதன்பின்னர் இந்த பாஸை ஒரு வருடத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் விரைவுச்சாலை, மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வழக்கம்போல் பாஸ்ட்டேக் வசூலிக்கப்படும். அதற்கேற்ற கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஏற்கெனவே வாகனங்களில் பாஸ்ட்டேக் வைத்திருப்பவர்கள் புதிய பாஸ்ட்டேக்கை பெற வேண்டியதில்லை. தற்போது இருக்கும் பாஸை வைத்தே புதிய வருடாந்திர பாஸை பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும், KYC சரியாக இருந்தால் மட்டுமே வருடாந்திர பாஸை பெற முடியும்.
மேலும், இந்த பாஸ்ட்டேக் வருடாந்திர பாஸ் ஒரு வருடத்திற்கு அல்லது முதல் 200 டிரிப்களுக்கு மட்டுமே. அதாவது, ஒரு வருடம் முடிந்த பின்னர் அல்லது 200 டிரிப்களுக்கு பின்னர் வழக்கம்போல் கட்டணம் வசூலாகும்.
பாஸ்ட்டேக் கணக்கு Chassis number கீழ் பதிவு செய்யப்பட்டால் உங்களால் இந்த வருடாந்திர பாஸை பெற முடியாது. எனவே உங்கள் வாகன பதிவு எண் கீழ் இந்த வருடாந்திர பாஸை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். மொபைல் நம்பரும் சரியாக கொடுக்க வேம்டும்.
இதனால், வருடத்தில் ஒருவர் ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் சேமிக்கலாம். என கூறப்படுகிறது. மேலும் பயணிக்கும் போது திடீர் திடீர் என ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. மேலும் வருடாந்திர பாஸை கண்டிப்பாக பெற வேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை. அதிகமாக நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பீர்கள் என்றால் நிச்சயம் இது உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ