)
Fastag Annual Pass Rs 3000: இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, தனியார் வாகனங்களுக்கு Fastag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இது ஆகஸ்ட் 15, 2025 முதல் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறி உள்ளார். இந்த பாஸின் விலை ரூ. 3 ஆயிரம் ஆகும்.
ரூ. 3000 செலுத்தி பெறப்படும் இந்த பாஸ் வணிக நோக்கம் இல்லாத கார்கள், ஜீப்புகள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பொருந்தும். இந்த பாஸின் மூலம் 200 பயணங்கள் அல்லது ஒரு வருடம் வரை செல்லுபடியாகும். சுங்க கட்டணம் செலுத்துவதை எளிதாக்குவதும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த புதிய திட்டம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் பயணத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Fastag பாஸை ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra App) மற்றும் NHAI (National Highway Authority Of India) மற்றும் MoRTH (Ministry of Road Transport And Highways) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ