சென்னை: பண்டிகை காலம் நெருங்கி வருவதால், பலர் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். மேலும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றதால், தற்போதைக்கு தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு எனக்கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் மீதான மதிப்பு உயர்ந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவை பொறுத்தவரை சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை பொருத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்று இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை இந்த வார முதல் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. அதுவும் இன்று சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதாவது ரூ. 200 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 35,504 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 4438 என விற்பனை செய்யப்படுகிறது. 


இப்படியே தங்கம் உயர்ந்துக் கொண்டே போனால், ஏழை மக்கள் தங்கம் வாங்குவது என்பது "எட்டாக்கனியாக" ஆகும் நிலை ஏற்படலாம் எனத் தோன்றுகிறது.


சென்னையில் 916 kdm ஹால்மார்க் 22 காரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் இன்றைய விலைகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்: 


24 காரட்:
ஒரு கிராம்: ரூ. 4802
8 கிராம்: ரூ. 38416


22 காரட்:
ஒரு கிராம்: ரூ. 4438
8 கிராம்: ரூ. 35504


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR