)
Madhya Pradesh Bans Sales Of Meat : மத்திய பிரதேசத்தில் பல இடங்களில், இறைச்சி, முட்டை, மீன் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
இறைச்சி விற்க தடை!
மத்திய பிரதேசத்தின் மைஹார், உமாரியா மற்றும் போபால் உள்ளிட்ட பகுதிகளில், இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, செப்டம்பர் 22 முதல், அக்டோபர் 2 வரை தொடரும் என்று கூறப்படுகிறது. இங்கு மட்டுமல்ல, குருகிராமிலும் இந்த தடை தொடர்கிறது. மகாசிவராத்ரி வருவதையொட்டி, ஒன்பது நாட்கள் விழா நடக்க இருக்கிறது. இதையொட்டி இந்த தடையானது அமலுக்கு வந்துள்ளது.
ஏன் தடை?
மத்திய பிரதேசத்தின் மைஹார் நகர், ஷார்தா கோயிலுக்கு பெயர் போன ஊராம். நவராத்திரி பண்டிகையையொட்டி இங்கு லட்சக்கணக்காண மக்கள் வந்து சாமி கும்பிடுவராம். இதனால், விழா ஏற்பாடுகளையொட்டியும், அவர்களது மத உணர்வுகளை கருத்தில் கொண்டும், இறைச்சி, மீன் மற்றும் முட்டையை அக்டோபர் 2 வரை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவசரகால தொல்லைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடி தடுப்பு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை வழங்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) 2023 இன் பிரிவு 163-ன் கீழ் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இதேபோல், உமாரியாவில், எஸ்டிஎம் கமலேஷ் நீரஜ் இந்த ஒன்பது நாட்களுக்கு அசைவ உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என்று கூரி தடை செய்தார். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் கலந்து, ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ