பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகும் நிதியமைச்சர்; மாநில நிதி அமைச்சர்களுடன் முக்கிய கூட்டம்!

Budget 2023-24: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட் தாக்கல் நடவடிக்கைகளின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2022, 03:06 PM IST
  • நிர்மலா சீதாராமனின் ஐந்தாவது பட்ஜெட்.
  • மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம்.
  • பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல்.
பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகும் நிதியமைச்சர்; மாநில நிதி அமைச்சர்களுடன் முக்கிய கூட்டம்! title=

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட் தாக்கலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தல், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை உயர்த்துதல் உட்பட அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு முன்னால், அரசாங்கம் என்ன மாதிரியான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பட்ஜெட் மீதான விரிவான ஆலோசனை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். கூட்டத்தில், பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டு ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும்.

பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் 

வரும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசு முன் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது. அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட், அதாவது 2023-24 நிதியாண்டு தாக்கல் செய்யப்படும். இந்த முறையும் பிப்ரவரி 1ம் தேதி அரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறது.

மேலும் படிக்க | 7th pay commission: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட்

மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் 

நாளை அதாவது நவம்பர் 25-ம் தேதி நிர்மலா சீதாராமன் மாநில நிதியமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தை நடத்துகிறார். கடந்த திங்களன்றும், பட்ஜெட் தொடர்பாக தொழில்துறை தலைவர்கள், உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்ற நிபுணர்களுடன் சீதாராமன் ஒரு கூட்டத்தை நடத்தினார்.

செவ்வாய் கிழமை ஆன்லைனில் கூட்டம் 

இதனுடன், விவசாயத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக, வேளாண் பதப்படுத்தும் தொழில், நிதி மற்றும் மூலதனச் சந்தைத் துறைகளின் பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை 'ஆன்லைன்' கூட்டத்தை நிதியமைச்சர் நடத்துகிறார். நவம்பர் 24 அன்று அதாவது இன்று, சேவைத் துறை மற்றும் வணிக நிறுவனங்கள் தவிர, கல்வி, சுகாதாரம், நீர் மற்றும் சுகாதாரத் துறைகள் தொடர்பான வல்லுநர்கள் சந்திப்பார்கள்.

நிர்மலா சீதாராமனின் ஐந்தாவது பட்ஜெட்

2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன் நிதி அமைச்சர் சீதாராமனின் ஐந்தாவது முழு பட்ஜெட் தாக்கல் இதுவாகும். பணவீக்கப் பிரச்சினையைச் சமாளிக்கவும், வேலைவாய்ப்பை மேலும் அதிகரிக்கவும், அரசாங்கம் பல புதிய முடிவுகளை எடுக்கலாம். இதனுடன் பொருளாதாரத்தில் 8 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க | காலநிலை மாற்றம்: உலகத் தலைவர்கள் எப்போது முக்கியத்துவம் தருவார்கள்?

மேலும் படிக்க | ஈஷாவால் யானைகளுக்கும் ஆபத்து, ஊருக்கும் ஆபத்து - உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News