)
Delhi Modi Cabinet Meeting Updates: டெல்லியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8, 2025) நடைபெற்ற மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அசாம் மற்றும் திரிபுராவுக்கு 4250 கோடி ரூபாய் சிறப்புத் தொகுப்பை அமைச்சரவை வழங்கியுள்ளது. இது தவிர, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவுக்காக ரூ.12,060 கோடியும், வீடுகளுக்கு மலிவு விலையில் எல்பிஜி வழங்க ரூ.30,000 கோடியும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்த ரூ.4,200 கோடி மற்றும் மரக்காணம்-புதுச்சேரி 4 வழிச் சாலைக்கு ரூ.2,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது என அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.52,667 கோடியை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
ரக்ஷாபந்தனுக்கு ஒரு நாள் முன்பு மோடி அமைச்சரவை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 2025-26 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகளுக்கு இலவச மானியத்தைத் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, அரசாங்கம் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுக்குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் நோக்கம் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். இதுவரை 10.33 கோடி உஜ்வாலா இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன" எனக் கூறினார்.
நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவான எல்பிஜி வழங்க ரூ.30 ஆயிரம் கோடி மானியம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார். தற்போதைய புவிசார் அரசியலில் காரணமாக எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாகக் கூறினார். இதைக் கருத்தில் கொண்டு மானியம் வழங்கப்படுகிறது" என்றார்.
தொழில்நுட்பக் கல்வியில் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு (MERITE) திட்டத்திற்கு ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீட்துடுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது இந்தியா முழுவதும் உள்ள 175 பொறியியல் நிறுவனங்கள் மற்றும் 100 பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
தமிழகத்தில் மரக்காணம் மற்றும் புதுச்சேரி 4 வழிச்சாலை (NH-332A)-ஐ அமைக்க மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக அரசாங்கம் ரூ.2,157 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் இடையேயான இருவழி தேசிய நெடுஞ்சாலை சாலை இருப்பதால், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக் இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மேபடுத்த ஒப்புதல் அளிக்கபப்ட்டு நிதி ஒதுக்க்கப்பட்டது.
அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் உள்ள இன மற்றும் பழங்குடி சமூகங்களின் மேம்பாட்டிற்காக, சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்புகளின் (SDPs) மத்திய துறைத் திட்டத்தின் ஒரு பகுதியாக ₹4,250 கோடி ஒதுக்குவதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ