இந்தியா - பாகிஸ்தான் போர்: ஏடிஎம், யுபிஐ வங்கி சேவைகளுக்கு தடையா?

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக, ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்படும்  என தகவல்கள் பரவியது. 

Written by - R Balaji | Last Updated : May 9, 2025, 09:25 PM IST
  • இந்தியா - பாகிஸ்தாம் இடையே போர் பதற்றம்
  • ஏடிஎம், யுபிஐ சேவைகளுக்கு தடையா?
இந்தியா - பாகிஸ்தான் போர்: ஏடிஎம், யுபிஐ வங்கி சேவைகளுக்கு தடையா?

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்படலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Add Zee News as a Preferred Source

பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்பை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (மே 09) ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், வங்கி உள்கட்டமைப்புகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்த சவாலான காலகட்டத்தில் பொருளாதாரத்தை பேணுவதில் வங்கி மற்றும் நிதித்துறையின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். அதேபோல் அனைத்து வங்களும் விழிப்புடன் இருக்கவும், எந்த ஒரு சூழ்நிலையையும் கையாளும் திறனுடன் இருக்கவும் தடையற்ற வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்க வலியுறுத்தினார். குறிப்பாக எல்லை பகுதிகளில் அதனை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும், எல்லை பகுதிகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் பாதுகாப்பையும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். அதேபோல் காப்பீட்டு நிறுவனங்கள் சரியான நேரத்தில் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை காணவும், தடையற்ற வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்யவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.  

மேலும் படிங்க: அணு ஆயுத தாக்குதல் நடந்தால்... என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

மேலும் படிங்க: பயணிகள் விமானத்தை கேடயமாக வைத்து தப்பித்த பாகிஸ்தான்... இந்திய ராணுவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News