Viral Video Of Giving Water To Cheetah : உலகில் நடக்கும் சில விஷயங்களை பார்க்கையில் “மனிதம் என்ற ஒன்று இருக்கிறதா?” என்று கேட்கத்தோன்றும். குழந்தைகள், பெண்கள், மிருகங்கள் என்று பலர் மீதான வன்முறைகள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இப்படி காயங்களால் நிரம்பியிருக்கும் உலகிற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும் சில விஷயங்கள் நடந்தேறி வருகிறது. அப்படிப்பட்ட விஷயங்களுள் ஒன்று, தற்போது நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அதைத்தொடர்ந்து உதவி செய்த நபரின் வேலைக்கும் வேட்டு விழுந்துள்ளது.
வைரல் வீடியோ:
சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் முழுவதும் ஒரு வீடியோ வைரல் ஆனது. அதில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒரு வனவிலங்குகளை பாதுகாக்கும் இடத்தில் சிறுத்தைகள் இருப்பதும், அவற்றிற்கு ஒரு ஓட்டுநர் தண்ணீர் வைக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.
In MP’s Sheopur, villagers offered water to cheetahs after they hunted goats — a surprising turn in human-wildlife relations.#Cheetah #Sheopur #ViralVideo #MadhyaPradesh #WildlifeIndia #MillenniumTimes pic.twitter.com/qmE8uJ65gd
— Millennium Times (@TimesMillennium) April 7, 2025
இந்த நபர், வனத்துறையினரால், வேலைக்கு எடுக்கப்பட்ட நபர் ஆவார். நமீபியாவில் இருந்து, பிராஜெக்ட் சீட்டா எனும் பெயரில் அழைத்து வரப்பட்ட சிறுத்தைகள் இருக்கும் இடத்தில், இவர் வேலைக்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கிருந்த ஒரு சிறுத்தை மற்றும் அதன் நான்கு குட்டிகளுக்கு இவர் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்திருக்கிறார்.
இந்த வீடியோவில், அந்நபர் “come" என்று சிறுத்தைகளை அழைப்பதும், அதற்கு அவை அடிபணியும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது. மெதுவாக அவரது அருகில் வந்து தண்ணீர் குடித்த அந்த சிறுத்தையை தொடர்ந்து அதன் குட்டிகளும் தண்ணீர் குடிக்கின்றன.
பணிநீக்கம்:
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சிறுத்தைக்கு தன்ணீர் வைத்த நபரை பணிநீக்கம் செய்திருக்கின்றனர். இது குறித்து பேசிய ஒரு அதிகாரி, இது போன்ற செயலில் ஈடுபட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இப்படி வீடியோ எடுத்தவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
பாதுகாவலர்கள் அமைக்கப்பட்டதன் காரணமே, சிறுத்தைகள் நகருக்குள் நுழைந்தால் அவற்றை மீண்டும் காட்டிற்குள் விடுவதற்காகத்தான் இது போன்றவர்களை நியமித்ததாக ஒருவர் கூறினார். சிறுத்தைகள், விவசாய நிலங்களுக்கு அருகில் வரும் போது, மனிதர்கள் அவற்றால் தாக்கப்படக்கூடும் என கூறிய அவர், அவை மனிதர்கள் நடமாடும் பகுதிக்குள் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததால்தான், தண்ணீரை வைத்து மீண்டும் வனப்பகுதிக்குள் வரவழைத்ததாகவும் கூறியிருக்கிறார்.
பணிக்காக அமைக்கப்பட்ட ஓட்டுநர் ஒருவர், பல அறிவுரைகளுக்கு பிறகும், சிறுத்தைக்கு மிக அருகில் இருந்தவாறு தண்ணீர் கொடுததாகவும், அவர் அவ்வளவு அருகில் செல்ல ட்ரைன் செய்யப்படாதவர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | வயதான மாமியாரை ஈவு இரக்கமின்றி தாக்கிய மருமகள்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..
மேலும் படிக்க | திருமண நிச்சயம் முடிந்த 10 நாளில்..இராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









