கடந்த வாரம் குஜராத்தின் அகமதாபாத்தில் லண்டனுக்கு புறப்பட்ட விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. மருத்துவமனை கல்லூரில் விடுதியில் மோதிய இந்த ஏர் இந்தியா விமானத்தில் 242 பேர் இருந்தனர். இதில் ஒருவரை தவிர்த்து மீதமுள்ள 241 பேரும் உயிரிழந்தனர். மருத்துவ கல்லூரி விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த விபத்து நாடும் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்பட்டுத்தியது.
இதற்கிடையில் விபத்து குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமெரிக்க கடற்படை விமானி கேப்டன் ஸ்டீவ் ஷீப்னர் என்பர், இரட்டை எஞ்சின் செயலிப்பு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறி உள்ளார். ஸ்டீவ் ஷீப்னர், விமான விபத்து குறித்து வீடியோக்களை ஆராய்ந்து அதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்குபவர் முன்னாள் கடற்படை விமானி ஸ்டீவ் ஷீப்னர்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விபத்து தொடர்பான வீடியோவை பார்த்த அவர், விபத்து ஏற்பட்ட காரணத்தை விளக்கி உள்ளார், இது தொடர்பாக பேசிய அவர், விமானிகள் லேண்டிங் பிளாப்ஸை சரியாக செட் செய்யாதது கூட விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதேபோல் பறவை மோதல் அல்லது எரிபொருள் சிக்கல் போன்ற காரணங்களாலும் எஞ்சின் செயலிழக்கலாம். அதால் கூட விபத்து ஏற்படலாம் என கூறினார்.
இதற்கிடையில், விபத்து தொடர்பான புதிய வீடியோவை ஆய்வு செய்த ஸ்டீவ் ஷீப்னர், இரட்டை எஞ்சின் செயலிழப்பு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. வீடியோவில் விமானத்தின் ராம் ஏர் டர்பைன் இயக்கப்பட்டதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளது. விமான புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த டர்பைன் இயக்கப்பட்டுள்ளது என கூறினார்.
தொடர்ந்து விமான விபத்துக்குள்ளாகுவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்த ஸ்டீவ் ஷீப்னர் சில முக்கிய தகவல்களை கூறினார். விமானத்தின் வலது பக்கத்தில் ஒரு சிறிய சாம்பல் நிறப் புள்ளி தெரியும். அது திரையில் ஏதோ ஒரு புள்ளி போல தோன்றலாம். ஆனால் அதுதான் ராம் ஏர் டர்பைன் RAT இயக்கப்பட்டத்தை இது உறுதிப்படுத்துகிறது. மேலும், விபத்து ஏற்படும் முன் ஒருவிதமான சத்தம் கேட்டது. அது ராம் ஏர் டர்பைன் RAT ஏற்படுத்தும் சத்தம். 400 அல்லது 500 அடி உயரத்தில் விமானம் தனது சக்தியை இழந்தால், இந்த RAT எந்த பயனும் அளிக்காது. ஏனெனில் அந்த உயரத்தில் எஞ்சினை மீண்டும் ஆன் செய்ய நேரம் இருக்காது என்றார்.
மேலும் படிங்க: இந்தியாவில் சாதிவாரி சென்சஸ் எந்த தேதியில் தொடங்குகிறது...? மத்திய அரசு அறிவிப்பு
மேலும் படிங்க: AI வந்தாலும் இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ