இரவு நேர விடுதிக்குள் கார் புகுந்து விபத்து: 4 பேர் பலி
உத்திரபிரதேசத்தில் போதையில் காரை ஓட்டி, சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
லக்னோ: உத்திரபிரதேசத்தில் போதையில் காரை ஓட்டி, சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
உபி மாநிலம் லக்னோ அருகே உள்ள தாலிபர்க் பகுதியில் தொழிலாளர்கள் சிலர் சாலையோரத்தில் படுத்து உறங்கி உள்ளனர். அப்போது சாலையில் ஓடிய கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
கார் மோதியதும், பலியானவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், காரில் வந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காரில் வந்தவர்கள் போதையில் வந்ததாக தகவல் வந்துள்ளது.
விபத்து குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.