65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை.. 30 நிமிடங்கள் இலவசம்!

Tirupati Darshan Special Offer: திருப்பதி செல்லும் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 13, 2025, 11:18 AM IST
  • திருப்பதி ஏழுமலையான் கோவில்.
  • மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை.
  • முழு விவரத்தையும் இங்கே காணலாம்.
65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை.. 30 நிமிடங்கள் இலவசம்! title=

Tirumala Tirupathi Devasthanam News In Tamil: 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு புதிய சிறப்பு சலுகை குறித்து மகிழ்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. யாருக்கு இலவச சலுகை வழங்கப்படும்? எதற்காக மூத்த குடிமக்களுக்கு சிறப்பு இலவச சலுகை வழங்கப்படுகிறது? அனைத்து விவரங்களையும் இங்கு தெரிந்துக்கொள்ளலாம். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 65 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த இலவச தரிசனத்திற்காக மூத்த குடிமக்கள் தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 3:00 மணி என இரண்டு நேரங்களை தேவஸ்தானம் ஒதுக்கி இருக்கிறது. 65 வயதிற்கு மேற்பட்ட பக்தர்களுக்கு மட்டுமே இந்த வசதியை பெற முடியும். 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் செய்யப்பட்டு உள்ள சிறப்பு சலுகை மூலமாக மூத்த குடிமக்கள் 30 நிமிடத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய முடியும். 

மேலும் மூத்த குடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும்போது மற்ற அனைத்து வரிசைகளும் நிறுத்தப்படும். இதனால் மூத்த குடிமக்கள் அமைதியாகவும் தொந்தரவு இல்லாமலும் திருப்பதி பெருமாளின் தரிசனத்தை பெற முடியும். 

அதேபோல மூத்த குடிமக்கள் கவுண்டரை அடைவதற்கு பார்க்கிங் பகுதியிலிருந்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவை வழங்கப்படுகிறது. 

இந்த தரிசனத்திற்கு தகுதி பெற ஒருவர் புகைப்பட அடையாளத்துடன் வயது சான்றிதழை எஸ்-1 என்ற கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த தரிசனத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் பக்தர்கள், தங்களுடைய புகைப்படம் மற்றும் அடையாள சான்றுடன் தட்சிண மடத் தெருவில் உள்ள திருமலை நம்பி கோவிலுக்கு அருகில் உள்ள நுழைவு வாயிலில் பதிவு செய்ய வேண்டும். 

தரிசனத்தின் போது மூத்த குடிமக்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் சூடான பால் இலவசமாக வழங்கப்படும். மேலும் மூத்த குடிமக்களுக்கு இரண்டு லட்டுகள் வழங்கப்படும். 

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு இலவச சலுகை குறித்து மேலும் விவரங்கள் தெரிந்துக்கொள்ள 08772277777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | LIVE நாளை பட்ஜெட் தாக்கல், முதலமைச்சர் எச்சரிக்கை, பிரதமருக்கு கேள்வி, பிடிஆர், செந்தில் பாலாஜி பதிலடி - இன்றைய அப்டேட்ஸ்

மேலும் படிக்க | Chandra Grahanam | மார்ச் 14.. சந்திர கிரகணம் நேரம், பரிகாரம், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News