)
அக்டோபர் 1 இன்று முதல் வங்கி சேவைகள், ரயில்வே டிக்கெட் முன்பதிவு, போஸ்ட் ஆபீஸ் மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் பல முக்கிய புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாட நிதி பழக்கவழக்கங்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்தும் முறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைவரும் இது குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.
இந்திய அஞ்சல் துறையின் Speed Post சேவை கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கின்றன. இந்த புதிய கட்டணங்களில் ஜிஎஸ்டி அடங்கும். மேலும், பார்சல்களை பாதுகாப்பாக விநியோகம் செய்ய OTP அடிப்படையிலான டெலிவரி வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
HDFC வங்கி தனது பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கான தகுதி விதிகளை கடுமையாக்கியுள்ளது. இன்று முதல், இந்த திட்டத்தில் தொடர விரும்பும் வாடிக்கையாளர்கள், வங்கியின் புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஜூன் 30க்கு முன்பு திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும்.
Yes Bank தனது சம்பள கணக்குகளுக்கான சேவை கட்டணங்களை இன்று முதல் புதுப்பித்துள்ளது. பண பரிமாற்றங்கள், ஏடிஎம் பயன்பாடு, டெபிட் கார்டு கட்டணங்கள் மற்றும் காசோலை பவுன்ஸ் அபராதங்கள் ஆகியவை புதிய விதிகளுக்கு உட்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது சேவை கட்டணங்களை இன்று முதல் உயர்த்தியுள்ளது. லாக்கர் வாடகை, ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் தோல்வி கட்டணங்கள் மற்றும் சில பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வேயின் IRCTC, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் ஒரு முக்கிய மாற்றத்தை இன்று முதல் கொண்டு வருகிறது. இனி, ஆதார் அட்டையை தங்களது கணக்குடன் இணைத்து, உறுதிப்படுத்திய பயனர்கள் மட்டுமே ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இது, மோசடிகள் மற்றும் டிக்கெட்டுகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி காசோலை பரிவர்த்தனைகளை வேகப்படுத்த, அக்டோபர் 4 முதல் புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பேட்ச் சிஸ்டம் முறைக்கு பதிலாக, உடனடி கிளியரிங்முறை அமல்படுத்தப்படும். இதன் மூலம், காசோலைகள் உடனடியாக பணமாக்கப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் வேகமாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் மாறும். இந்த மாற்றம் இரண்டு கட்டங்களாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், தேசிய ஓய்வூதிய திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்களுக்கான கணக்கு பராமரிப்பு கட்டணங்களை இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது. இது, ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்குகூடுதல் செலவுகளை ஏற்படுத்தலாம். இந்த புதிய விதிகள், பொதுமக்களின் நிதி சார்ந்த நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் இந்த விதிகளை அறிந்து, அதற்கேற்ப திட்டமிட்டு கொள்வது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ