SIR செய்த சித்து விளையாட்டு; தமிழ்நாட்டில் இதை நடக்க விடமாட்டோம் - அகிலேஷ் சொல்வது என்ன?

Bihar Election Result 2025: பீகாரில் SIR விளையாடிய விளையாட்டை, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் நடக்க விடமாட்டோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 14, 2025, 02:32 PM IST
  • என்டிஏ கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை
  • மகா கூட்டணி 40க்கும் குறைவான தொகுதிகளில் முன்னிலை
  • பீகாரில் எஸ்ஐஆர் மூலம் லட்சக்கணக்கில் வாக்காளர்கள் நீக்கம்.
SIR செய்த சித்து விளையாட்டு; தமிழ்நாட்டில் இதை நடக்க விடமாட்டோம் - அகிலேஷ் சொல்வது என்ன?

Bihar Assembly Election Result 2025: பீகாரில் யாருமே எதிர்பார்க்காத வகையில், எந்த கருத்துக்கணிப்புகளும கணிக்காத வகையில் ஆளும் தேசிய ஜனநாயக கூடட்ணி பெரிய வெற்றியை குவித்து சாதனை புரிந்துள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.

Add Zee News as a Preferred Source

Bihar Election Result 2025: அதிக தொகுதிகளை வென்ற பாஜக

பீகாரில் ஆட்சியமைக்க 122 தொகுதிகள் போதுமானது என்ற நிலையில், கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125  இடங்களை பெற்றது. மகா கூட்டணியோ 110 இடங்களையே வென்றது. ஆனால், இம்முறை காட்சிகள் மொத்தமாக மாறியிருக்கிறது. பாஜக மட்டும் 91 இடங்களில் தற்போது முன்னிலை வகித்து வருகிறது. மகா கூட்டணி 40க்கும் குறைவான இடங்களிலேயே முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் மட்டும் 75 தொகுதிகளில் வென்றிருந்தது. 

Bihar Election Result 2025: ராகுல் காந்தியின் 95வது தோல்வி

மகா கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் சந்தித்த நிலையில், அவரது அரசியல் வாழ்வுக்கும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் மட்டுமின்றி காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் அரசியல் வாழ்வுக்கும் பெரும் சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது ராகுல் காந்தியின் 95வது தேர்தல் தோல்வி என்றும் பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

Bihar Election Result 2025: பாஜக வஞ்சகர்களின் கட்சி

குறிப்பாக, ராகுல் காந்தி பீகார் தேர்தலையொட்டி மேற்கொண்ட வாக்குத் திருட்டு பிரச்சாரம் மற்றும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிரான பிரச்சாரம் ஆகியவை எடுபடவில்லை எனவும் பாஜகவினர் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் உத்தர பிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், பீகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் நடவடிக்கையால் பாஜகவை வஞ்சகர்களின் கட்சி என சாடியிருக்கிறார்.

Bihar Election Result 2025: தமிழ்நாட்டில் இதை நடக்கவிடமாட்டோம்...

ஒரு தேர்தல் சதி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பீகாரில் SIR செய்த சித்து விளையாட்டு இனி மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அதே நடக்க விடக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் போட்ட X பதிவில், "இந்தத் தேர்தல் சதி அம்பலமாகிவிட்டதால், பீகாரில் SIR விளையாடிய விளையாட்டு இனி மேற்கு வங்கம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் மற்றும் பிற இடங்களில் நடக்கக்கூடாது. இனிமேல், அவர்கள் இந்த விளையாட்டை விளையாட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், நமது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் சிறுபானிமையினர் ஆகியோர் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், தமிழ்நாட்டில் நடக்கவிட மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜக ஒரு கட்சியல்ல என்றும் அது வஞ்சகர்களின் கூடாரம் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | 1 கோடி மகளிருக்கு ரூ.10 ஆயிரம் போட்ட NDA... ஆட்சியை கைப்பற்ற இதுதான் காரணமா?

மேலும் படிக்க | அலிநகர் தேர்தல் முடிவு 2025: பீகார் மக்கள் அதிகமாக உச்சரிக்கும் பெயர் மைதிலி தாக்கூர்..! யார் இவர்?

மேலும் படிக்க | வாக்கு எண்ணிக்கையை மெதுவாக்க சதி... குண்டை தூக்கிப்போட்ட தேஜஸ்வி - இது ஏன் முக்கியம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News