பெண்களுக்கு வருது ரூ. 5 ஆயிரம்! அதுவும் மகளிர் தினத்தில்... அமைச்சர் கொடுத்த அப்டேட்!

5000 Rupees For Women: மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் சுபத்ரா திட்டத்தில், வரும் மகளிர் தினத்தில் (மார்ச் 8) இரண்டாவது தவணையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2025, 12:25 PM IST
  • தற்போது 98 லட்சத்திற்கும் மேல் பயனாளர்கள் உள்ளனர்.
  • புதிதாக 1,17,000 பயனாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • சுபத்ரா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு வருது ரூ. 5 ஆயிரம்! அதுவும் மகளிர் தினத்தில்... அமைச்சர் கொடுத்த அப்டேட்!

5000 Rupees For Women: இந்தியா முழுவதும்  பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு திட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும் பெண்களின் வாழ்வை சிறப்பாக்கிட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

Add Zee News as a Preferred Source

5000 Rupees For Women: மகளிர் தினத்தில் பல்வேறு அறிவிப்புகள்

தமிழ்நாட்டை குறிப்பிட்டுச் சொன்னால், முதலமைச்சர் ஸ்டாலின் (TN CM MK Stalin) ஆட்சிக்கு வந்த பின் பெண்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு பள்ளியில் பயின்று தற்போது உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் ஆகிய திட்டமும் பலத்த வரவேற்பை பெற்றது. ஆனால் இவற்றை காட்டிலும், பெண்களுக்கு மாதம் ரூ.1000 ஆயிரம் உரிமைத்தொகையாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) நாடு முழுவதும் சென்றடைந்தது.

5000 Rupees For Women: பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000

இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களை செயல்படுத்த தொடங்கின. டெல்லியில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசும் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த மகளிர் தினத்தில் செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், வரும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் அன்று பல்வேறு திட்டங்களை மகளிர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | பெண்களுக்கு ரூ.2,500 மாதந்தோறும்... மார்ச் 8 மகளிர் தினத்தில் வருது நல்ல செய்தி!

அந்த வகையில், ஒடிசா மாநில மகளிருக்கு தற்போது நல்ல செய்தி ஒன்று வந்திருக்கிறது. ஒடிசாவில் மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதனை ஒடிசா மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஆண்டுக்கு இரண்டு தவணைகளாக இந்த ஊக்கத்தொகை செலுத்துகிறது. அதாவது ரூ.5 ஆயிரமாக இரண்டு முறை பெண்களின் வங்கிக் கணக்கிற்கே செலுத்திவிடுகிறது. இத்திட்டத்தின் சுபத்ரா திட்டம் (Subhadra Scheme) ஆகும், இதற்கும் ஒடிசாவில் பெரிய வரவேற்பு இருக்கிறது.

5000 Rupees For Women: சுபத்ரா திட்டத்தில் ஊக்கத்தொகை பெற தகுதிகள்

21 வயதான பெண்கள் முதல் 60 வயதான பெண்கள் வரை இத்திட்டத்தில் ஊக்கத்தொகை வாங்க தகுதியானவர்கள் ஆவர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தை ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி சட்டப்பேரவையில் அறிவித்தார். இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.55 ஆயிரத்து 825 கோடியை ஒடிசா அரசு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தின் முதல் தவணை ராக்கி பூர்ணிமா தினத்திலும், இரண்டாவது தவணை சர்வதேச  மகளிர் தினத்திற்கும் (மார்ச் 8) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் 2028-29 வரை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த 5 ஆண்டுகளில் பயனாளர் ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒடிசாவின் துணை முதலமைச்சரும், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான பிரவதி பரிதா சுபத்ரா திட்டம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளார். இதுவரை 98 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் உள்ள நிலையில், இந்த திட்டத்தின் பயனாளர்களை விரிவாக்கம் செய்துள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார். 

5000 Rupees For Women: மார்ச் 8இல் வருது ரூ.5 ஆயிரம்

இதுகுறித்து அவர் பேசியதாவது, "98 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் சுபத்ரா திட்டத்தில் இருக்கின்றனர், எங்களது இலக்கு 1 கோடி மகளிரை சேர்ப்பதாகும். வரும் மார்ச் 6ஆம் தேதி 1,70,000 மகளிருக்கு இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 8ஆம் தேதி 1 கோடி மகளிருக்கு தலா ரூ.5000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்" என்றார். இந்த திட்டத்தின் பயனாளர்களுக்கு சுபத்ரா டெபிட் கார்டும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் மட்டுமின்றி, பெண்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும் அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும்  100 பயனாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கூடுதலாக ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்....!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News