Central Government : உலகளவில் மரணத்திற்கான இரண்டாவது முக்கிய காரணியாக இருக்கும் புற்றுநோயை எதிர்கொள்வதற்கு, மத்திய அரசு புதிய அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம், நவீன சிகிச்சைகளுடன் பாரம்பரிய சிகிச்சை முறைகளை இணைக்கும் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை முறையை (Integrative Cancer Care) மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு, சிறப்புக் கல்வி மையங்கள் மற்றும் சமுதாய விழிப்புணர்வு மத்திய அரசு விரிவாக்கி வருகிறது.
அமைச்சர் ஸ்ரீ பிரதாப்ராவ் ஜாதவ்
டெல்லியில் நடந்த இதுதொடர்பான நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆயுஷ் துறை (தனிப் பொறுப்பு) மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரதாப்ராவ் ஜாதவ் அவர்கள், "பொது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் முன்னெச்சரிக்கை அணுகுமுறை அவசியம். மத்திய அரசின் திட்டங்கள்—சிறப்பு மையங்கள், கூட்டு ஆய்வுகள் மற்றும் சமுதாயத் திட்டங்கள்—மலிவான, முழுமையான மற்றும் ஆதரவான கவனிப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும்," என்று தெரிவித்தார். ஆயுர்வேதம், யோகா போன்ற சிகிச்சை முறைகளை நவீன புற்றுநோய் மருத்துவத்துடன் இணைப்பது என்பது குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிகிச்சைக்கே முன்னுரிமை
ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா பேசுகையில், "இந்தியாவின் ஒருங்கிணைந்த புற்றுநோய் முயற்சிகள், ஆதாரபூர்வமான, நோயாளி மையத் தீர்வுகளை வலுப்படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. TMC-ACTREC, ஆரிய வைத்ய சாலை (கோட்டக்கல்), AIIMS போன்ற முன்னணி நிறுவனங்களுடனான ஆயுஷ் அமைச்சகம் ஏற்படுத்தியுள்ள கூட்டாண்மை, புதிய சிகிச்சை முறைகள் மற்றும் அறிகுறிகள் மேலாண்மைக்கு உதவுகிறது. முறைப்படுத்தப்பட்ட ஆய்வு மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம், ஆயுஷ் முறைகள் நவீன சிகிச்சைக்கு வலுவான துணை சிகிச்சையாக செயல்பட முடியும் என்பதை இந்த முயற்சிகள் காட்டுகின்றன," என்றார்.
சிறப்பு மையங்களில் சாதனை
மும்பையில் உள்ள TMC–ACTREC மற்றும் கேரளாவில் உள்ள ஆரிய வைத்ய சாலை, கோட்டக்கல் போன்ற முக்கிய மையங்கள் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
கோட்டக்கல் ஆரிய வைத்ய சாலை: ஒருங்கிணைந்த பராமரிப்பு மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 26,356 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பு மற்றும் ஆரம்ப கண்டறிதல்
புகையிலை, ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சி இன்மை போன்ற தவிர்க்கக்கூடிய காரணிகளே புற்றுநோய் பாதிப்புக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. மார்பகம், வாய், கருப்பை புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவது சிகிச்சையின் வெற்றியை அதிகரிக்கும். ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், புற்றுநோய் சுமையைக் குறைக்க, தடுப்பு, ஆரம்ப கண்டறிதல் மற்றும் ஒருங்கிணைந்த ஆதரவு சிகிச்சை ஆகியவை இந்தியாவின் சுகாதார மறுமொழிக்கு மையமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதும், நவீன மருத்துவம் இணைப்பதும் நோயாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | எறும்பால் உயிரிழந்த பெண்.. வித்தியாசமான நோயால் தவிப்பு... இதுபற்றி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









