)
Bikes In India: 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் விற்கப்படும் அனைத்து இருச்சக்கர வாகனங்களிலும் அது ஸ்கூட்டராக இருந்தாலும் சரி, மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் சரி, ABS பிரேக் கட்டாயம் இருக்க வேண்டும். இஞ்சின் அளவு என்ற எந்த பாரபட்சமும் இன்றி இருச்சக்கர வாகனங்களில் எல்லாம் ABS பிரக் பொருத்தப்பட்ட விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ABS 40% பைக்குகளில் இல்லை
ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், நாட்டில் சாலை விபத்து மற்றும் அதன் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு காரணமாக இந்த புதிய விதிமுறையை கொண்டுவர உள்ளது.. இப்போது 125cc மேல் இஞ்சின் கொண்ட பைக்குகளில் மட்டுமே ABS பிரேக் பொருத்தப்படுவது கட்டாயமாக உள்ளது. அதாவது நாட்டில் விற்கப்படும் 40% இருச்சக்கர வாகனங்களில் இந்த பாதுகாப்பு அம்சம் இடம்பெறவில்லை எனலாம்.
ABS எதற்கு?
ABS என்பேது Anti-Lock Braking System என்றழைக்கப்படுகிறது. ABS எதற்கு என்றால், இருச்சக்கர வாகனத்தை அதன் ஓட்டுநர் திடீரென பிரேக் போடும்போது அல்லது பிரேக்குகளை வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தும்போது சக்கரங்கள் லாக் ஆவதை தடுக்கிறது. இந்த பிரேக் அமைப்பு ஓட்டுநரிடம் வாகனத்தின் கட்டுப்பாடு இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளும். இதனால், வண்டி சறுக்காது அல்லது விபத்துக்குள்ளாகது. ABS அமைப்பை பொருத்துவதன் மூலம் இதுபோன்ற அபாயத்தைக் குறைக்கலாம். ABS அமைப்பு விபத்துக்கான வாய்ப்பை 35% முதல் 45% வரை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2 ஹெல்மட்கள் கட்டாயம்
இந்த ABS அமைப்பு சார்ந்த விதிமுறையில் மட்டுமின்றி மத்திய அரசு மற்றொரு முக்கிய மாற்றத்தையும் செய்திருக்கிறது. இதுவரை இருச்சக்கர வாகனங்களை விற்பனை செய்யும்போது அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு BIS தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மட்டை மட்டுமே கொடுக்கிறது. ஆனால், வரும் 2026ஆம் ஆண்டில் இருந்து வாடிக்கையாளர்கள் இருச்சக்கர வாகனங்களை வாங்கினால் அவர்களுக்கு அத்துடன் 2 BIS தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மட்டை நிறுவனம் வழங்க வேண்டும். இதன்மூலம் இருச்சக்கர வாகனத்தில் செல்லும் இருவரின் பாதுகாப்பு உறுதியாகிறது எனலாம்.
விபத்துகளை தடுக்க புதிய ரூல்ஸ்
இந்தியாவில் வாகனங்கள் பெருகிவிட்டன. குறிப்பாக, கார், பைக் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டன். ஒரே ஒருவருக்கு ஒரு கார் என்ற ரீதியில் தற்போது வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இப்போது தெருவில் நூறு குடும்பங்கள் இருந்தால் நிச்சயம் நூறுக்கும் மேல் இருச்சக்கர வாகனங்கள் அந்த தெருவில் நிற்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இப்போதெல்லாம் கல்லூரி மாணவர்களே பைக் வாங்க தொடங்கிவிட்டனர் என்பதால் எண்ணிக்கை அதிகரிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் விபத்துக்களும் அதிகரிக்கிறது எனலாம். எனவே, சாலை பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலேயே இந்த விதி மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் ஒட்டுமொத்த சாலை விபத்துகளை எடுத்துப் பார்த்தோமானால் அதில் 44% இருச்சக்கர வாகனங்களாகவே இருக்கின்றன. அதிலும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலையில் காயம் ஏற்பட்டதனாலும், அவர்கள் தலைக்கவசம் அணியாததும்தான் பிரதான காரணமாக கூறப்படுகிறது.
பாதுகாப்பும் முக்கியம்
பெரும்பாலும் இந்தியாவில் பைக்கை கணவர் ஓட்டுகிறார் என்றால், பின் இருக்கையில் மனைவி அமர்ந்திருப்பார். கணவர் மட்டுமே ஹெல்மட் அணிந்திருப்பார், மனைவி அணிந்திருக்க மாட்டார். இதனால் விபத்து ஏற்படும்போது பின் பக்கம் அமர்ந்திருப்பவர்கள் படுகாயம் அடைய வாய்ப்புள்ளது. எனவே, இதை தடுக்கும் வகையிலேயே மத்திய அரசு புதிய ரூல்ஸை கொண்டுவந்துள்ளது. இந்த விதிகள் குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ