)
Reserve Bank of India New Announcement: தற்போதைய காலகட்டத்தில் வங்கிகளில் கடன் வாங்குவது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில நேரங்களில் இஎம்ஐ தொகையை கட்ட முடியாத சிக்கல் ஏற்படுவது உண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவேளை கடன் தொகையை செலுத்த முடியாவிட்டால் என்ன நடக்கலாம்? எப்படிப்பட்ட சட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை பார்க்கலாம்.
வாருங்கள் வங்கிகளில் கடன் எடுத்தவர்கள் மற்றும் அதனை வசூல் செய்பவர்கள் கடைபிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள், முக்கியமான அறிவுரைகள் மற்றும் முக்கிய உள்ளடக்கங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் ஒருவர் கடன் பெறும் போது அந்த தொகையை மாத தவனை முறையில் செலுத்தும் வழிமுறை உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி முழு கடனையும் கட்டி தீர்க்க முடியும். இஎம்ஐ தாமதமானால் வங்கிகள் கட்டணம் (Late Fees, Penal Charges) வசூலிக்க முடியாது. இதனால் சிபில் கிரெடிட் ஸ்கோரும் அதிகரிக்கும்.
அதேநேரம் நீங்கள் இஎம்ஐ செலுத்த தவறும் போது சட்டரீதியான பல சிக்கல்கள் ஆரம்பமாகும். அதற்கான கடன் பெற்றவர் பீதி அடைய தேவையில்லை. ஏனெனில் நிதி சிக்கல் காரணமாக இஎம்ஐ கட்ட தவறினால் சிறையில் அடைக்கப்படும் அளவுக்கு அது குற்றமில்லை. சொத்துகள் கைப்பற்றுதல், கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு, வங்கி நோட்டீஸ் அனுப்புதல் உள்ளிட்ட சிவில் நடவடிக்கைகள் மட்டும் நடைபெறும். ஆனால் காசோலை பவுன்ஸ் ஆனால் அதை கொடுத்தவர் சிறைக்கு செல்ல நேரிடும். ஆனால் வங்கி கடனில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் இல்லை.
1. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி இஎம்ஐ செலுத்தாதவர்களை அழைத்து யாரும் மிரட்ட கூடாது.
2. மேலும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று தவனைகளை கட்டவில்லை என்றால் கடன் கொடுத்த வங்கி கடன் பெற்றவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
3. ஆனால் கடன் வசூலிப்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது.
4. கடன் வாங்கியவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று ஆர்பிஐ கூறுகிறது.
5. பணம் செலுத்தப்படாத பட்சத்தில் அவர்கள் அடகு வைத்த சொத்தை ஏலமிடுவதற்கு முன்பு கடன் பெற்றவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
6. கடன் வாங்கியவர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகு மட்டுமே சொத்தை ஏழம் விடப்பட வேண்டும்.
7. அதேபோல ஏதாவது காரணத்தினால் கடனை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் போனால் அதை குறித்து வங்கி மேலாளரிடம் தெரிவிக்கலாம்.
8. வங்கி மேலாளரிடம் பேசி கடன் காலத்தை நீட்டிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகளோ இருந்தால் அவற்றை பின்பற்றலாம்.
9. கடன் வாங்கியவர்கள் கூறிய காரணமா சரியாக இருக்கும் பட்சத்தில் வங்கிகளும் அதை பரிசீலிக்க அதிக வாய்ப்புள்ளது.
10. இஎம்ஐ கட்ட தவறினால் சிறையில் அடைக்கப்படும் அளவுக்கு அது குற்றமில்லை. ஆனால் வாங்கிய கடனை ஏதாவது வகையில் அடைத்தே தீர வேண்டும்.
கடன் எடுப்பதும், அதனை நிர்வகிப்பதும் நியாயமான சட்ட விதிகளின் கீழ் நடைபெறுகிறது. கடன் கட்டத் தவறியவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்புகள் உள்ளன மற்றும் கடன் வசூல் பணியில் ஈடுபடுபவர்கள் கடுமையாக நடக்க கூடாது என்பதும் முக்கியமான ஒன்றாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ