)
Dearness Allowanc Aarrears Latest Update: மூன்றாவது தவனை நிலுவை தொகை அகவிலைப்படி வழங்குவது குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக இருக்கிறது. இந்த மூன்றாவது தவணை அகவிலைப்படி நிலுவை தொகை வந்து எந்த வகையைச் சார்ந்த அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும்? இன்னும் எத்தனை தவனை அகவிலைப்படி பணம் வழங்குவது நிலுவையில் உள்ளது? என்பது சார்ந்து விவரங்களை தெரிந்துக்கொல்லுவோம்.
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு சார்ந்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையினை ஏற்று மாநில அரசு இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு பல லட்சம் மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது மாநில அரசு ஊழியர்கள் 55% அகவிலைப்படியே பெறுவார்கள். மாநிலத்தில் உள்ள சுமார் 7.5 லட்சம் அரசு ஊழியர்கள் இதனுடைய பலன்களை பெறுவார்கள். பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வை அரசு தற்போது அறிவித்துள்ளது. தற்போது மாநில அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியே பெறுவார்கள். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்கப்படும். இந்த தொகை ஐந்து சமமான தவனையில் வழங்கப்படும்.
முதல் தவனை பணம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டது. கடைசி தவனை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்படும். இதனால் ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிதிச்சுமை குறையும்.
அகவிலைப்படி நிலுவை தொகை அறிவிப்பின்படி ஜூலை 1, 2024 முதல் ஏப்ரல் 30, 2025 வரையிலான நிலுவை தொகை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2025 மாதங்களில் ஐந்து சம தவணைகளில் வழங்கப்படும்.
மாநில அரசு ஊழியர்கள் ஜூலை 1, 2024 முதல் மே 31, 2025 வரை ஓய்வு பெற்றவர்கள், ஒருவேளை மரணம் அடைந்து இருந்தால், நிலுவை தொகை அவர்களின் வாரிசுகளுக்கு ஒரே தவணையில் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு எந்த மாநில அரசுக்கு பொருந்தும் என்றால், இது மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். இதனுடைய அறிவிப்பை மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் காரணமாக மத்திய பிரதேச அரசு ஊழியர்கள் ஐந்து நிலுவைத் தொகையை பெறுவார்கள். அதன்படி மூன்றாவது தவணை பணம் ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல இன்னும் இரண்டு தவணை பணம் விரைவில் வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ