இனி பிறப்புச் சான்றிதழ் பெற 'நோ வெயிட்டிங்' - மத்திய அரசு கொடுத்த அப்டேட்!

Birth Certificate: இனி பிறப்புச் சான்றிதழ் பெற நீண்ட நாள்கள் காத்திருக்க தேவையில்லை. மத்திய அரசின் RGI தற்போது புதிய அப்டேட் கொடுத்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 27, 2025, 04:04 PM IST
  • இதுகுறித்து RGI மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது.
  • பிறப்புச் சான்றிதழ் முக்கியமான அரசு ஆவணமாகும்.
  • பிறப்புச் சான்றிதழ் மூலமே மற்ற அரசு சேவைகளை பெற முடியும்.
இனி பிறப்புச் சான்றிதழ் பெற 'நோ வெயிட்டிங்' - மத்திய அரசு கொடுத்த அப்டேட்!

Birth Certificate: இந்தியாவில் மொத்த மக்கள்தொகை என்ன என்று கேட்டால் பலருக்கும் சரியான எண்ணிக்கை தெரியாது எனலாம். கடைசியாக இந்தியாவில் 2011ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

Add Zee News as a Preferred Source

அதற்கு பின்னர் இன்னும் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2027ஆம் ஆண்டில்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்றும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பின்னரே மொத்த மக்கள்தொகை எண்ணிக்கை தெரியவரும்.

Birth Certificate: சீக்கிரம் கிடைக்கும் பிறப்புச் சான்றிதழ்

சுமார் 143 கோடிக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு போன்ற அரசு ஆவணங்களை அனைவரும் பெற வேண்டியது முக்கியம். இவற்றை விட இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்பதற்கு அடையாளமான பிறப்புச் சான்றிதழும் மிக முக்கியமாகும். குழந்தை பிறந்த உடன் சில நாள்களில் பிறப்பு சான்றிதழும் வழங்கப்படுகிறது. பிறப்பு சான்றிதழ்தான் அனைத்து அரசு ஆவணங்களை பெறுவதற்கும் முக்கியமானதாகும்.

அப்படியிருக்க இந்தியப் பதிவாளர் ஜெனரல் (Registrar General Of India - RGI)தற்போது அனைத்து மாநில அரசுகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி குழந்தை பெற்றெடுத்த பின்னர் அந்த தாய் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் முன்னரே அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதுகுறித்து The Hindu ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. பிறப்புச் சான்றிதழ் தாயாரிக்கும் செயல்முறை, குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்கு நிறைவடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Birth Certificate: RGI எழுதிய கடிதம்

இதுகுறித்து RGI கடந்த ஜூன் 12ஆம் தேதி வெளியிட்ட கடிதத்தில், "பதிவு செயல்முறையை சீராகவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றும் முயற்சியில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969இல் திருத்தங்களின் கீழ், பிறப்பு மற்றும் இறப்புகளின் மாநில பதிவு விதிகளில் தொடர்புடைய திருத்தம், ஒரு புதிய மத்திய CRS (Civil Registration System) இணையதளத்தை உருவாக்குதல் உள்ளிட்ட சிவில் பதிவு முறையை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது"  என குறிப்பிட்டுள்ளது. 

மேலும் அந்த கடிதத்தில், "பிறப்புச் சான்றிதழின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. எனவே, இதை கணக்கில் வைத்து, புதிதாக பிறந்த குழந்தையின் தாய் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பு சான்றிதழ் வழங்கப்படுவது முக்கியமாகும். குறிப்பாக குறிப்பாக  50% குழந்தை பிறப்புகள் நடக்கும் அரசு மருத்துவமனைகள் பிறப்புச் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. 

Birth Certificate: எதற்கு இந்த நடவடிக்கை?

பிறந்த குழந்தைகளில் சுமார் 10% பேர் பிறப்புச் சான்றிதழை பெறுவதில்லை என RGI அதன் ஆய்வில் மூலம் தெரிந்துகொண்டுள்ளது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் பிறப்பு மற்றும் இறப்பை 21 நாள்களில் பதிவு செய்ய வேண்டும் என்று RGI எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், பல மருத்துவ நிறுவனங்கள் இந்த விதியை சரியாக பின்பற்றுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. 

Birth Certificate: பிறப்புச் சான்றிதழ் ஏன் முக்கியம்?

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின்படி, பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஆவணமான பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், பாலினம் ஆகியவை குறிப்பிடப்படும். இதுதான் அடையாள சான்றாகவும், வயது சான்றாகவும், குடிமகனுக்கான சான்றாகவும் இருக்கும். இதனை வைத்தே பல்வேறு அரசு சேவைகள், ஆவணங்களை பெற வேண்டும். 

குறிப்பாக, பள்ளிக் கூடங்களில் சேர்வதற்கும், வாரிசு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் முக்கியம் ஆகும். பல மாநிலங்கள் அதன் இணையத்தளத்திலேயே ஆன்லைனில் பதிவு செய்ய வழிவகை செய்கின்றன. crsorgi.gov.in என்ற தேசிய இணையதளத்திலும் பதிவு செய்யலாம். விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செயது, அதனை பிரிண்ட் எடுத்து, பதிவுத்துறை அலுவலகத்தில் மற்ற தேவைப்படும் ஆவணங்களுடன் சென்று இதை சமர்பிக்க வேண்டும். 

மேலும் படிக்க | ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் இனி இந்த தேர்வு எழுத முடியாது - மத்திய அரசின் குட் நியூஸ்

மேலும் படிக்க | “என்னை தொட்டா வெட்டிடுவேன்” முதலிரவில் கணவனை மிரட்டிய மனைவி! அதிர வைக்கும் சம்பவம்..

மேலும் படிக்க | பிளாக் பாக்ஸ்களின் தரவுகள் கிடைச்சாச்சு... விமான விபத்தின் காரணத்தை நெருங்கும் அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News