)
Mahila Rojgar Yojana: பெண்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத்துடனும், சமூகத்தில் மதிப்புடனும் இருக்கும்பொருட்டு எக்கச்சக்கமான நலத்திட்டங்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சமூகத்தின் விளம்புநிலையில் வாழும் மக்களுக்கு நிதி உதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கு வெவ்வேறு திட்டங்கள் இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் பீகார் அரசு பெண்களுக்காக அறிவித்த திட்டம் ஒன்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக 10 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி அவர்களை இன்னும் சுதந்திரமாக இயங்க வழிவகை செய்யும். மகளிரும் இதனால் நேரடியாக பயனடையலாம். இந் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்பிப்பதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மகிளா ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க முதல் தவணையாக பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு எவ்வித தகுதிகளும் கிடையாது, யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்த திட்டம் குறித்து சமீபத்தில் அவரது X பக்கத்தில் அறிவித்திருந்தார்.
பீகார் அமைச்சரவை மகிளா ரோஜ்கர் யோஜனா என்ற இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்தாண்டு இறுதியில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், தேர்தல் அட்டவணை அறிவிக்கும் முன்னர் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பெண்கள் சுயதொழில் தொடங்கலாம், அதன்மூலம் பெண்களின் பொருளாதார நிலை உயரும். இது அவர்கள் தற்சார்பாக இயங்க வழிவகுக்கும்.
முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா, சுயதொழில் தொடங்க இருக்கும் மகளிருக்கு வழங்கப்படுகிறது, அவர்கள் இத்திட்டத்திற்கான விண்ணப்பம் விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பத்திற்கான செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது. பீகார் ஊரக வளர்ச்சித்துறை இந்த பொறுப்பை கையில் எடுத்துள்ளது. நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறையும் இத்திட்டத்தில் ஒத்துழைப்பை அளிக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் இத்திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறையோ அல்லது இணையதளமோ தொடங்கப்படவில்லை எனலாம்.
இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம், தொழில் தொடங்குவதற்கு முதல் தவணையாக வழங்கப்படுகிறது. அதன்பின், பெண்கள் தொடங்கிய தொழிலை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் அவர்களுக்கு மேலும் ரூ.2 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது . இதற்கென எந்த தகுதி அளவுகோள்களும் அறிவிக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ