)
Google Map Team Thrashed By UP Villagers : உத்திர பிரதேசத்தில் சர்வே எடுக்க வந்த கூகுள் பேப் காரை கிராம மக்கள் அடித்து உடைத்திருக்கின்றனர். இதற்கு பின்னால் பெரிய காரணமும் இருக்கிறது. இது குறித்த முழு தகவல், இதோ.
கூகுள் மேப்பின் குழு ஒன்று, உத்திர பிரதேசத்தில் இருக்கும் கான்பூருக்கு சில நாட்களுக்கு முன்பு இரவில் சென்றிருக்கிறது. இவர்கள், பிர்கார் என்கிற கிராமத்தின் பக்கம் வரும் போது, கேமராக்களின் உதவியுடன் அங்கிருக்கும் தெருக்களை சர்வே எடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். அவர்கள் தெருக்களை போட்டோ எடுத்துக்கொண்டே வரும் போது, அருகில் இருந்த கிராம மக்கள் அவர்களின் காரை வழிமறித்து நிறுத்தியிருக்கின்றனர்.
பின்னர், யார் நீங்கள், ஏன் கேமராவுடன் வருகிறீர்கள் என்று கேட்டிருகின்றனர். கூகுள் மேப் குழுவினர் இதற்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, விவாதம் சண்டையாக மாறி இருக்கிறது. கிராம மக்கள், அந்த குழுவினரை சகட்டு மேனிக்கு தாக்கியிருக்கின்றனர். இறுதியில் காவல் துறையினர் வந்துதான் சண்டையை நிறுத்தியிருக்கின்றானர்.
போலீசார், கூகுள் மேப் குழுவினரையும், சண்டையில் ஈடுபட்ட கிராம மக்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்திருக்கின்றனர். அப்போதுதான் கிராம மக்கள் அவர்களை தாக்கியதற்கான காரணம் தெரிந்திருக்கிறது.
விசாரணையில், கிராம மக்கள் கூகுள் மேப்ஸ் குழுவினரை திருட்டு கும்பல் என நினைத்து அடித்திருப்பது தெரிய வந்துள்ளது. ஊரில் திருட்டு நடப்பது மிகவும் அதிகமாகி விட்டதால், யார் ஊருக்குள் வந்தாலும், கிராம மக்கள் சமீப நாட்களாக விழிப்புடன் இருந்து வந்திருக்கின்றனர். பெரிய காரில் கேமராவுடன் கூகுள் மேப்ஸ் குழுவினர் வந்த பின்பு, அவர்கள் சந்தேகமடைந்து அவர்களை தாக்கியிருக்கின்றனர். பின்பு, தாங்கள் திருட வரவில்லை என்பதை தெளிவுபடுத்திய பின்பு கிராமத்தினர் அமைதியானார்கள்.
கிராமத்தினரின் விளக்கத்தை கேட்ட கூகுள் மேப்ஸ் குழுவினர், இவர்களுக்கு எதிராக புகார் கொடுக்க விருப்பமில்லை என்று தெரிவித்து இருக்கின்றனர். பின்னர், தொடர்ந்து அந்த இடத்தை மேப் செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போது வரை அவர்களின் பணியானது எந்த பிரச்சனையுமின்றி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ