Pahalgam News: காஷ்மீரின் 48 சுற்றுலா தலங்கள் மூடல்... அரசு அதிரடி - முழு பின்னணி

Pahalgam News In Tamil: காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை தற்காலிகமாக மூடுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்திருக்கிறது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 29, 2025, 10:34 AM IST
  • ஜம்மு காஷ்மீரில் 87 சுற்றுலா தலங்கள் உள்ளன.
  • தற்போது 39 தலங்கள் மட்டுமே திறந்துள்ளன.
  • சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
Pahalgam News: காஷ்மீரின் 48 சுற்றுலா தலங்கள் மூடல்... அரசு அதிரடி - முழு பின்னணி

Pahalgam News In Tamil: பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் அரசு காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்திருக்கிறது.

Add Zee News as a Preferred Source

Pahalgam News: பலத்த பாதுகாப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கான மொத்த 87 தலங்களில், தற்போது மூடப்பட்டுள்ள இந்த 48 இடங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளன அல்லது பாதிக்கப்படக்கூடியதாக கருதப்படும் பகுதிகளில் அமைந்துள்ளன என்று ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்பத்ரி, யூஸ்மார்க், கௌசர்நாக், தௌசிமைதான், அஹர்பால், பங்கஸ், கரிவான் டைவர் சண்டிகம், பங்கஸ் பள்ளத்தாக்கு, ராம்போரா, ராஜ்போரா உள்ளிட்டவை மூடப்பட்டுள்ள இடங்களில் அடங்கும். போன்றவை. மேலும், தற்போது சுற்றுலாவுக்கு அனுமதியுள்ள 39 இடங்களிலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Pahalgam News: பயணிகளின் வருகை குறைவு

பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மறுநாள், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகளின் போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவில் குறையத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றனர். 

ஏப்ரல் 23ஆம் தேதி அன்று 112 விமானங்கள் மூலம் 17 ஆயிரத்து 653 பயணிகளே பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் 6 ஆயிரத்து 561 பேர் ஸ்ரீநகருக்கு வருகை தந்திருக்கின்றனர். மற்ற 11 ஆயிரத்து 92 பேர் ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்டவர்கள் ஆவர். அதேபோல், ஏப்ரல் 24ஆம் தேதியில், ஸ்ரீநகர் விமான நிலையம் மூலம் 118 விமானங்களில் 15,836 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் 4 ஆயிரத்து 456 பேர் ஸ்ரீநகருக்கு வருகை தந்தவர்கள். 11 ஆயிரத்து 380 பேர் ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்டவர்கள் ஆவர். இதன்மூலம், ஜம்மு காஷ்மீரில் இருந்து புறப்பட்டவர்களே அதிகம் என்பது தெரிய வருகிறது. தற்போதைய கோடை காலகட்டம் அங்கு சுற்றுலா பயணிகள் குவியும் காலகட்டமாகும். ஆனால், இந்த தாக்குதலை தொடர்ந்து இங்கு மக்கள் சுற்றுலா வருவதற்கு அச்சப்படுவதாக கூறப்படுகிறது.

Pahalgam News: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் உள்ள பைசரனின் புல்வெளிப் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் உள்பட பலரும் காயமடைந்தனர். இந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என குரல்கள் உலகம் முழுவதும் இருந்து எழுந்துள்ளன. 

இந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கும் இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டுகிறது. இதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Pahalgam News: வீடுகளில் சோதனை

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்க பாகிஸ்தான் தடை விதித்திருக்கிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்திருக்கிறது. இந்த சூழலில், இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படுவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பகல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், தோடா, கிஷ்த்வார் ஆகிய இடங்களில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை, பிற பாதுகாப்பு நிறுவனங்கள் சோதனைகளை மேற்கொண்டன. பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய பல வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. "ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நீதிபதிகள், சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் முறையான சட்ட நடைமுறைகளின்படி சோதனைகள் நடத்தப்பட்டன” என்று ஒரு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Pahalgam News: வீடுகள் தகர்ப்பு

பாதுகாப்புப் படையினர் ஆறு நாட்களில் அந்த பள்ளத்தாக்கில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கான சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இதுவரை பகல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு தொடர்புடையவர்களாக கருத்தப்படும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோரின் 9 வீடுகளும் தகர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பகல்காம் தாக்குதல்: பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்ட குடும்பம்

மேலும் படிக்க | பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்குத் தடை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News