ராஜஸ்தானில் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானின் பிங் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்பூர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி காளிச்சரண் சாரப் டோல்பூர் இடைத்தேர்தல் பணிக்காக சென்று கொண்டிருக்கும் போது திடீரென காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள கட்டடம் ஒன்றின் சுவரில் மீது சிறுநீர் கழித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு ஜெய்ப்பூர் மாநகராட்சி ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு மந்திரி தரப்பில் எந்த பதிலும் அனுப்படவில்லை. இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை எனினும் இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என மந்திரி தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் தலைவர் ரகு ஷர்மா கூறுகையில்; அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டும். மந்திரியின் இந்த செயலுக்கு அம்மாநில அரசு வெட்கப்பட வேண்டும், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.
காங்கிரஸ்கட்சியின் துணைத் தலைவர் அர்ச்சனா சர்மா கூறுகையில்; மந்திரியின் இந்த செயல் வெட்கக்கேடானது. காளிச்சரண் சாரப் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது முதன்முறை இல்லை. என அவர் கூறினார்.