Groom Killed Bride On Their Wedding Night : உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் உள்ள சாதத் கஞ்ச் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப்.. இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்த பெற்றோர், அதே பகுதியை சேர்ந்த ஷிவானி என்ற பெண்ணை பேசி முடித்தனர்.
கடந்த சனிக்கிழமையன்று, இவர்களுக்கு இரு வீட்டினரும் தடபுடலான திருமணத்தை செய்தார்கள்.. அன்றைய தினம் மணமகனின் வீட்டில், தம்பதிக்கு திருமணத்திற்கு பிந்தைய சடங்குகள் நடந்து முடிந்தன.. அன்று இரவே மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.. இதையடுத்து, மணமகனும், மணமகளும் தங்களது அறைக்கு சென்றனர்..
ஆனால், மறுநாள் காலை புதுமண தம்பதியினர், தங்களது அறைக்கதவை திறக்கவேயில்லை.. நீண்ட நேரமாக இருவருமே கதவு திறக்காததால், சந்தேகமடைந்த உறவினர்கள், புதுமணத் தம்பதியினர் படுத்திருந்த ரூம் கதவை தட்டினார்கள்.. ஆனால், பலமுறை தட்டியும் கதவை இருவருமே திறக்கவுமில்லை, ரூமிலிருந்து எந்த பதிலும் வரவும் இல்லை..
இதனால் பயந்துபோன குடும்பத்தினர், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் புதுப்பெண் ஷிவானி சடலமாகி கிடந்துள்ளார்.. அங்கிருந்த ஃபேனில், மணமகன் பிரதீப் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. இதைக்கண்டு அலறிய குடும்பத்தினர், உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும், விரைந்து வந்து மணமக்களின் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, விசாரணையை துவங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து உறுதியாகியுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர் மேலும் திருமணத்திற்கு முந்தைய உறவுகள் தொடர்பான பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் கள்ளக்காதல் விவகாரமா? என்பது குறித்து 2 தரப்பு பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறுகின்றனர்
பிரதீப்பின் மூத்த சகோதரர் தீபக் குமார் சொல்லும்போது, "திருமணத்தின்போது எல்லாமே சுமூகமாக நடந்தது.. தம்பதியினர் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்துதான் இரவு உணவு சாப்பிட்டார்கள்.. சாப்பிட்டுவிட்டு ரூமுக்குள் சென்றனர்.. ஆனால், அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. மறுநாள் ரிசப்ஷன் என்பதால், அதற்கான காய்கறிகள் வாங்க, காலையில் கிளம்பி சென்றபோதுதான், அறைக்கதவு திறக்காமலேயே இருந்தது சந்தேகத்தை கிளப்பியது" என்றார்.இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் விசாரணையின் முடிவில் தான் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும்.
மேலும் படிக்க | பெற்ற தாயை அடித்து-கடித்து சித்திரவதை செய்த மகள்! வைரலாகும் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









