குஜராத் விமான விபத்து: 11 குழந்தைகள் உள்பட விமானத்தில் பயணித்தவர்களின் லிஸ்ட்!

Ahmedabad Air Plane Crash Passengers List : குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் 242 பயணிகளுடன் சேர்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பது பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயணம் செய்தவர்களின் பெயர் விவரம் வெளியாகியிருக்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 12, 2025, 03:42 PM IST
  • குஜராத் விமான விபத்து
  • 242 பேர் நிலை என்ன?
  • பயணித்தவர்களின் பெயர் விவரம்
குஜராத் விமான விபத்து: 11 குழந்தைகள் உள்பட விமானத்தில் பயணித்தவர்களின் லிஸ்ட்!

Ahmedabad Air Plane Crash Passengers List : குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து, லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம், கிளம்பிய 10 நிமிடங்களுக்குள், பயணிகள் குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதில், பயணிகள் 242 பேர், விமானிகள் 2 பேர் மற்றும் விமான ஊழியர்கள் 10 பேர் பயணித்திருக்கின்றனர். இதில் யாரெல்லாம் பயணம் செய்தார்கள் என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.

பயணம் செய்தவர்களின் விவரம்:

விபத்துக்குள்ளான விமானத்தில், குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி, சீட் நம்பர் 12ல் பயணித்ததாக கூறப்படுகிறது. இவருடன் இந்த விமானத்தில் 11 குழந்தைகள் மற்றும் 54 வெளிநாட்டவர் பயணம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர்களின் பெயர் விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது துரிதமாக நடைப்பெற்று வருகிறது. 90 பேர் கொண்ட மீட்புக்குழு அகமதாபாத் விரைந்துள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அகமதாபாத் செல்கிறார்.

விமான விபத்து:

ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக AI 171 விமானம், குஜராத் சர்தார் வலாபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணியளவில் கிளம்பியிருக்கிறது. லண்டனை நோக்கி செல்ல இருந்த இந்த விமானம், கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியிருக்கிது. இந்த விமானம், லண்டன் காட்விக் விமான நிலையத்தை சென்றடைய வேண்டியதாக இருந்தது. விமானம், 1:39 மணிக்கு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. 

‘மே டே’ அழைப்பு:

விமானிகள், விமானம் செயலிழந்து போனாலோ, அல்லது விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டாலோ அவசர உதவிக்காக பிற விமான நிலையங்களை தொடர்பு கொள்வர். அதற்காக அவர்கள் உபயோகிக்கும் கோட் வர்ட்தான் “மே டே” என்பது. ரேடியோ சிக்னல் மூலம் இந்த தொடர்பானது அழைக்கப்படும். இது உயிருக்கு ஆபத்தான நேரத்தில்தான் தொடர்புகொள்ளப்படும். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, இந்த அழைப்பானது விமான நிலையத்திற்கு வந்ததாகவும், அதன் பிறகு விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Plane Crash | விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. உள்ளே இருக்கும் 242 பேரின் நிலை என்ன?

மேலும் படிக்க | குஜராத் விமான விபத்து: கிளம்பிய 10 நிமிடங்களில் துயரம்! சூழ்ந்த கரும்புகை..வைரல் புகைப்படங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News