டாக்ஸிக்கு காத்திருந்த பெண்... டக்குனு ஜிப்பை திறந்து இளைஞன் செய்த செயல் - ஷாக் சம்பவம்!

Crime News: பொது இடத்தில் பெண் ஒருவர் டாக்ஸிக்கு காத்திருந்தபோது, அந்த பெண்ணின் முன் நின்று இளைஞர் ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 7, 2025, 08:07 PM IST
  • அந்த பெண் சமூக வலைதள பிரபலம் ஆவார்.
  • இச்சம்பவம் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடந்துள்ளது.
  • இதுகுறித்து அந்த பெண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
டாக்ஸிக்கு காத்திருந்த பெண்... டக்குனு ஜிப்பை திறந்து இளைஞன் செய்த செயல் - ஷாக் சம்பவம்!

Crime News In Tamil: ஹரியானா மாநிலம் குருகிராமில் இளம் பெண் ஒருவர் டாக்ஸிக்கு காத்திருந்தபோது, இளைஞர் ஒருவரால் தான் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தின் முழு பின்னணி என்ன என்பதை இங்கு காணலாம். 

Add Zee News as a Preferred Source

Crime News: பட்டப்பகலில் நடந்த கொடுமை

கடந்த ஆகஸ்ட் 2 அன்று ஜெய்ப்பூரில் இருந்து சோனி சிங் என்ற பெண் குருகிராமுக்கு காலை 11 மணியளவில் வந்துள்ளார். அவர் டாக்ஸிக்கு காத்திருந்தபோது இந்த பாலியல் ரீதியான அத்துமீறல் நடந்துள்ளது. சோனி சிங் இந்த சம்பவத்தை மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அப்போதே அந்த பெண் காவல்துறைக்கும், பெண்கள் பாதுகாப்பு ஹெப்லைனையும் தொடர்புகொண்டதாகவும், ஆனால் எவ்வித பதிலும் இல்லை என குற்றஞ்சாட்டி உள்ளார். சோனி சிங் ஒரு மாடல் மற்றும் சமூக வலைதள பிரபலம் என்பதால், இந்த பிரச்னை குறித்து் அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Crime News: நடந்தது என்ன?

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி சோனி சிங், ராஜிவ் சௌக் பகுதிக்கு வந்தடைந்துள்ளார். அங்கிருந்து அவரது வீட்டுக்கு டாக்ஸி புக் பண்ணியுள்ளார். அந்த டாக்ஸிக்கு காத்திருந்தபோது ஒரு இளைஞன் அவரை நெருங்கி உள்ளான். இதுகுறித்து சோனி சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "அவன் என்னை சுற்றிச் சுற்றி வந்தான். தொடர்ந்து என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். முதலில் நான் அவரை கண்டுக்கவில்லை. அதற்கு பின் அவனை பார்த்தபோதே அவன் பேன்ட் ஜிப்பை அவிழ்த்ததை பார்த்துள்ளார். தொடர்ந்து என்னையை பார்த்துக்கொண்டிருந்த அவன் திடீரென என் முன்னாடியே சுய இன்பம் செய்ய தொடங்கிவிட்டான். 

அவன் என்ன செய்கிறான் என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அவன் செய்வது அசௌகரியமாக உணரவைத்தது. மேலும், எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. உடனே எனது டாக்ஸி ஓட்டுநருக்கு மொபைலில் அழைத்தேன், அவர் போனை எடுக்கவில்லை. உடனே அதை கேன்சல் செய்துவிட்டு, அவனிடம் தப்பித்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மற்றொரு டாக்ஸியை புக் செய்தேன்" என்றார்.

Crime News: சமூக வலைதளத்தில் வீடியோ போட்ட பெண்

அதற்கு பின் கிடைத்த டாக்ஸியில் ஏறி வீடு வந்து சேர்ந்ததாகவும், அதன்பின்னரே இந்த வீடியோவை போடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வீடியோவில் அந்த நபர் சுய இன்பம் செய்யும் புகைப்படத்தையும் இணைந்திருந்தார். இதை இன்ஸ்டாகிராமில் மட்டுமின்றி அந்த பெண் தனது X தளத்திலும் பகிர்ந்துள்ளார்.

Crime News: பெண் முன்வைத்த குற்றச்சாட்டுகள்

மேலும் அந்த பதிவில் சோனி சிங், "மிக வெறுப்பாகவும், பாதுகாப்பற்ற வகையிலும், உதவியற்றவளாகவும் நான் உணர்ந்தேன். பகலில் கூட பெண்கள் பொது இடங்களில் ஏன் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள்? இதுபோன்ற வக்கிரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை. பொது இடங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என தனது மனவலியை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் காவல்துறைக்கும், பெண்கள் பாதுகாப்பு ஹெப்லைனுக்கும் தொடர்புகொண்டும் யாரும் பதிலளிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். அங்கிருந்து வந்த பின் காவல்நிலையம் வந்து புகார் கொடுக்கும்படி போலீசார் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துல்ளார். 

இதற்கு பின், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி சோனி சிங் மற்றொரு வீடியோவும் வெளியிட்டார். அதில் அந்த அடையாளம் தெரியாத நபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் அவனை சட்டத்திற்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, தான் போன் செய்தபோது எடுக்காமல் தன்னை பதற்றத்திற்குள்ளாக்கிய ஓட்டுநர் மீதும் சம்பந்தபட்ட செயலிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Crime News: அந்த நபரை தேடி வரும் போலீசார்

ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்த வீடியோவை பாரத்த குருகிராம் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் காவல்துறை செய்திதொடர்பாளர் சந்தீப் கூறுகையில், "குற்றஞ்செய்த நபரை தேடி வருகிறோம். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அவனை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார். 

சமூக வலைதள பிரபலமான சோனி சிங் அழகு சாதனம், சரும பாதுகாப்பு, பெண்களின் உடைகள் சார்ந்து அதிகம் பதிவிடுவார். இவரை சுமார் 40 ஆயிரம் பேர் சமூக வலைதலங்களில் பின்பற்றுகின்றனர்.

மேலும் படிக்க | பாலியல் குற்றம் செய்து ஜெயிலுக்கு சென்ற நபர்..மீண்டும் வந்து புகாரளித்த பெண்ணை சுட்ட கொடூரம்!

மேலும் படிக்க | இந்தியாவில் கள்ள உறவு..குற்றமா? குற்றம் இல்லையா? இதை தெரிந்து கொள்ளுங்கள்..

மேலும் படிக்க | 13 வயசு சிறுமிக்கு... 40 வயசு ஆணுடன் கல்யாணம் - குழந்தை திருமணத்திற்கு வறுமை காரணமில்லையாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ                                                                                 

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News