)
Guruvayur Temple Reel Controversy : கேரள மாநிலம் திருசூர் மாவட்டத்தில் குருவாயூர் கோவில் உள்ளது. இங்கு, தினந்தோறும் பல லட்சக்கணக்காணோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கேரளாவில் வசிப்பவர்களை தாண்டி, தமிழ்நாடு, வட மாநிலங்களில் இருந்தும் இந்த கோயிலுக்கு வந்து சிலர் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலை வைத்து ரீல்ஸ் செய்த ஒரு பிரபலம், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார்.
சர்ச்சையில் சிக்கிய பிரபலம்:
சில மாதங்களுக்கு முன்னதாக, குருவாயூர் கோயிலில் இன்ஸ்டா பிரபலம் ஒருவர் ரீல்ஸ் செய்திருந்தார். அவரது பெயர், ஜாஸ்மின் ஜாபர். குருவாயூர் கோயிலின் குளத்தில் கால் நனைப்பது போல எடுக்கப்பட்டிருந்த அந்த ரீல்ஸ் வீடியோ, பெரிய பேசு பொருளானது. இதையடுத்து, பலரும் அந்த பிரபலத்துக்கு கண்டனம் விதித்தனர்.
கோயில் நிர்வாகம், இந்த பெண்ணால் கோயிலின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக கூறி, சிறப்பு பூஜைகள் செய்தது. மேலும், புனித தளங்களில் ரீல்ஸ் வீடியோ எடுக்க கூடாது என்று கூறி கேரள உயர்நீதிமன்ற தடை விதித்து உத்தரவிட்டது. உச்சபட்சமாக, குருவாயூர் கோயிலுக்குள் இந்து அல்லாதோர் நுழைய தடை விதிக்கப்பட்டது.
மீண்டும் சர்ச்சை!
தற்போது மீண்டும் இன்னொரு சர்ச்சை எழுந்துள்ளது. இங்கு, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் குருவாயூர் கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்திருக்கிறார். கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ஜஸ்னா சலீம் எனிற பெண், சமீபத்தில் குருவாயூர் கோவிலுக்கு சென்று ரீல்ஸ் வீடியோ எடுத்திருக்கிறார். தற்போது இது மீண்டும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜஸ்னா சலீம் மீது, தற்போது கோவில் நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது. இதையடுத்து, போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ