)
Rs 5000 For Labourers: நவராத்திரி பண்டிகை நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் மக்கள் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அடுத்த மாதம் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையும் வருகிறது. இந்நிலையில் நவராத்திரி மற்றும் தீபாவளியையொட்டி, தொழிலாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை விடுவிக்கப்பட்டது என மாநில அரசு அறிவித்துள்ளது.
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று (செப். 17) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விஷ்வகர்மா பூஜை இன்று பீகாரில் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்மூலம், தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக ரூ.5 ஆயிரத்தை பீகார் அரசு செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி சமூக, பொருளாதார நிலையும் உயரும். பீகார் தொழிலாளர்கள் இந்த உதவித்தொகையை பெற விண்ணபிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர ஆடை உதவித் திட்டத்தின்கீழ் சுமார் 1 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 29 தொழிலாளர்களுக்கு ரூ.5 யிரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.802 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகார் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின்கீழ் உள்ள தொழிலாளர்களும் இதனால் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது. நல வாரியத்தில் இணைய ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம். பதிவு செய்ததும் உங்களுக்கு பதிவு எண் வழங்கப்படும். அதன்பின் https://bocwscheme.bihar.gov.in/home என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளீடு செய்து, அதில் பெயர் இருந்தால் அவர்கள் பயனாளர்கள் ஆவர். பெயர் இல்லையென்றால் திட்டத்தில் இணையவில்லை என அர்த்தம்.
இதுகுறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று போட்ட X பதிவில், "இன்று, 'பீகார் கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின்' கீழ் உள்ள தொழிலாளர்களின் கணக்குகளுக்கு நிதி மாற்றப்படுவது மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. 16 லட்சத்து 44 ஆயிரத்து 929 கட்டுமானத் தொழிலாளர்களின் கணக்குகளுக்கு இன்று வருடாந்திர ஆடை உதவித் திட்டத்தின் கீழ், ஒரு தொழிலாளிக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 802 கோடியே 46 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நேரடியாக மாற்றப்பட உள்ளது.
இது கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். அவர்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், முதலமைச்சரின் உறுதிமொழித் திட்டத்தின் இணையத்தளமும் தொடங்கப்படுகிறது.
சமூகத்தின் அடி மட்டத்தில் உள்ள மக்களை பொது நீரோட்டத்திற்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே உழைத்து வருகிறோம். மாநிலம் இன்று பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தின் புதிய பரிமாணங்களைத் தொடும் விதத்தில் நமது தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவர்களின் வளர்ச்சிக்காக அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும்" என குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த X பதிவில் அவர் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும் என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ