)
Indian Railways: இந்தியன் ரயில்வே எப்போதுமே பயணிகளுக்கான சேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கும். செல்வச் செழிப்பானவர்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமின்றி ஏழை, எளிய சாமானிய மக்களுக்கும் ஏற்ற சேவையை வழங்குவதில் இந்தியன் ரயில்வேக்கு நிகர் இந்நாட்டில் யாருமில்லை எனலாம்.
Indian Railways: முன்பதிவு முறையில் மாற்றம்
இந்தியன் ரயில்வே பயணிகளின் முன்பதிவு முறையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. பயணிகளின் முன்பதிவு முறையில் பல்வேறு மேம்படுத்தல்களை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்த இருக்கிறதாம். அந்த வகையில், விமான நிறுவனங்கள் பின்பற்றும் நடைமுறையைப் போலவே, பயணிகள் தங்களுக்கு விருப்பமான இருக்கையைத் தேர்ந்தெடுக்க இனி இந்தியன் ரயில்வே அனுமதிக்கும் என கூறப்படுகிறது. பயணிகளின் முன்பதிவு முறையில் இது முக்கிய மாற்றமாக இருக்கும்.
Indian Railways: இருக்கையை பயணிகளே தேர்வு செய்யலாம்
இந்த அப்கிரேட் குறித்து ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், "இந்த ஆண்டு இறுதிக்குள் இது செயல்பாட்டுக்கு வரும். இந்த முன்பதிவு முறை, இருக்கை தேர்வு மட்டுமல்லாமல், கட்டண நாட்காட்டியையும் காண்பிக்கும். இதனால் பயனர்கள் அனைத்து தகவல்களையும் அறிந்து முன்பதிவு மேற்கொள்ள முடியும்" என்கிறார். கட்டண நாட்காட்டி (Fare Calendar) என்ற அம்சம் பல்வேறு தேதிகளில் ரயில்களின் டிக்கெட் விலைகளைப் பார்க்கவும், ஒப்பிடவும் பயணிகளுக்கு உதவும் ஒரு அம்சம் எனலாம். இதன்மூலம், எப்போது குறைந்த விலையில் விலையில் பயணிக்கலாம் என்பதை பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.
Indian Railways: இனி சார்ட் சீக்கிரம் வெளியாகும்
மேலும் அந்த அதிகாரி கூறுகையில்"இருக்கைகளை தேர்வு செய்யும் வசதி மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகள் போன்றோருக்கான ஒருங்கிணைந்த வசதிகளையும் கொண்டுள்ளது," என்றார். சமீபத்தில், பயணிகள் முன்பதிவு முறையில் ஏற்படும் இந்த சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மதிப்பாய்வு செய்ததாகவும், புத்திசாலித்தனமான, வெளிப்படையான, அணுகக்கூடிய, திறன்வாய்ந்த டிக்கெட் முறையின் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். முன்பதிவு சார்டிங்கிலும் முக்கிய மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது.
அதாவது, அந்த அதிகாரி இதுகுறித்து மேலும் கூறுகையில், "தற்போது ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னர் முன்பதிவுக்கான சார்ட் தயாராகும். அதை எட்டு மணி நேரத்திற்கு முன்பே வெளியிட திட்டமிட்டுள்ளனர்," என்றார். உதாரணத்திற்கு ஒரு ரயில் மதியம் 2 மணிக்கு முன் புறப்படுகிறது என்றால், முந்தைய நாள் இரவு 9 மணிக்குள் தயாராக வழிவகை செய்யப்படும் என்கிறார். இது முன்பதிவு டிக்கெட் உறுதியாகுமா இல்லையா என்பதை காத்திருப்பு பட்டியலில் (Waiting List) இருக்கும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம். 8 மணி நேரத்திற்கு முன்னரே தெரிந்துகொள்வதன் மூலம் பேருந்து அல்லது பயணத்திற்கான மாற்று வழி குறித்தும் அவர்கள் திட்டமிட வாய்ப்பிருக்கும் எனலாம்.
Indian Railways: இந்தாண்டு இறுதிக்குள் வரும்...
"ரயில்வே தகவல் அமைப்பு மையத்தால் (CRIS) இந்த மேம்படுத்தப்பட்ட நவீன பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) உருவாக்கப்பட்டது. இது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அந்த ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
புதிய பயணிகள் டிக்கெட் முன்பதிவு அமைப்பு விரைவாக இருக்கும் என கூறப்படுகிறது. நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவுகளைக் கையாளும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தற்போதைய திறனை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ