ஓய்வூதியத்தை 3 மடங்கு உயர்த்திய மாநில அரசு... கோடிக்கணக்கானோர் ஹேப்பி!

Pension Hike: தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கான மாத ஓய்வூதிய தொகையை சுமார் 3 மடங்கு உயர்த்தி பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 22, 2025, 07:59 AM IST
  • இதில் 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பயனடைந்து வருகின்றனர்.
  • இதுவரை அனைவருக்கும் 400 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
  • வரும் ஜூலை மாதத்தில் இருந்து சுமார் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்தை 3 மடங்கு உயர்த்திய மாநில அரசு... கோடிக்கணக்கானோர் ஹேப்பி!

Pension Hike: 2026ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இப்போதே இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அதேபோல், 2025ஆம்  ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

Add Zee News as a Preferred Source

Pension Hike: பீகாரில் இந்தாண்டு தேர்தல் 

பீகாரில் (Bihar) தற்போது ஆட்சியில் இருக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு அதற்கான வேலைகளில் துரிதமாக செயல்பட தொடங்கிவிட்டனர் எனலாம். குறிப்பாக, தான் அளித்த வாக்குறுதிகள் மட்டுமின்றி தற்போது மாநிலத்தில் எழுந்து வரும் கோரிக்கைகள் என பலவற்றையும் நிதிஷ் குமார் அரசு நிறைவேற்றி வருகிறது.

Pension Hike: உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் 

அந்த வகையில், பீகாரின் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் (Bihar Social Security Pension Scheme) வழங்கப்பட்ட தொகையை உயர்த்தி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீகாரின் இந்த சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் மூத்த குடிமக்கள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் ஆகியோரும் பயனடைவார்கள். இவர்களின் மாத ஓய்வூதிய தொகை தற்போது 700 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pension Hike: இனி மாதம் ரூ.1,100 ஓய்வூதியம்

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் உள்ளிட்டோருக்கு இதுவரை மாதந்தோறும் 400 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அந்த வகையில், நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசின் நேற்றைய அறிவிப்பை தொடர்ந்து இந்த தொகை தற்போது 1100 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், இந்த திட்டத்தின் பயனர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். நிச்சயம் சமூகத்தின் விளிம்புநிலை மக்களான இவர்களுக்கு இந்த தொகை பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையும் அளிக்கும் எனலாம்.

Pension Hike: கோடிக்கணக்கானோர் மகிழ்ச்சி 

இந்த திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நேற்று அவரது X பதிவில்,"சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அனைத்து முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்கள் ஒவ்வொரு மாதமும் 400 ரூபாய்க்கு பதிலாக 1100 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து பயனாளிகளுக்கும் அதிகரிக்கப்பட்ட இந்த தொகை ஓய்வூதியமாக கிடைக்கும். இந்தத் தொகை மாதத்தின் 10ஆம் தேதி அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படுவது உறுதி செய்யப்படும். ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது இத்திட்டத்தின் பயனாளிகளான 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேருக்கு பெரியளவில் உதவும்.

Pension Hike: 'வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்'

முதியோர் சமூகத்தின் விலைமதிப்பற்றவர்களாக உள்ளனர், மேலும் அவர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே எங்கள் முதன்மையான முன்னுரிமை. இந்த திசையில் மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்" என குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் நிதிஷ் குமாரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, "கைம்பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை முதல்வர் உயர்த்தியுள்ளதன் மூலம், இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் எனலாம். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்றார். 

மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்து: ஈரானில் சிக்கிய இந்திய மாணவர்கள்! பத்திரமாக நாடு திரும்பிய 290 பேர்!

மேலும் படிக்க | பிறந்தநாளில் தேம்பி தேம்பி அழுத திரௌபதி முர்மு! காரணம் என்ன? வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | பெண்களுக்காக ஹெல்மெட் விஷயத்தில்... மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு - புது ரூல்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News