)
Pension Scheme: சமூக பாதுகாப்பு மற்றும் நல ஓய்வூதியத் திட்டம் என்பது அரசின் திட்டமாகும். வயதானவர்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு நிதி ஆதரவு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு மற்றும் நல நிதி ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக இந்த திட்டம் மாநில அரசுகளால் இயக்கப்படுகிறது. சில இடங்களில் மத்திய அரசும் இதில் பங்களிக்கிறது. தற்போது இந்த திட்டம் கேரளாவிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் கடந்த ஜூலை மாதத்தில் சமூக பாதுகாப்பு மற்றும் நல நிதி ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ஓய்வூதிய தொகையை தற்போது விடுவிப்பதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது, இந்த ஆகஸ்ட் மாதத்தில் 62 லட்சம் பேருக்கு இரண்டு மாத ஓய்வூதிய தொகையை விடுவிப்பதாக கேரள நிதித்துறை அமைச்சர் கேஎன் பாலகோபால் அறிவித்துள்ளார்.
கேரளாவில் செப்டம்பரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை மக்கள் கொண்டாடும் வகையில் இந்த ஓய்வூதியத்தை விடுவிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 62 லட்சம் பேர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சமூக பாதுகாப்பு மற்றும் நல நிதி திட்டத்தின் கீழ் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மொத்தம் ரூ.1679 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு ஓய்வூதியக்காரர்களும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 3200 ரூபாயை ஓய்வூதியமாக பெறுவார்கள்.
இந்த தொகை இத்திட்டத்தின் கீழ் உள்ள 26 லட்சத்து 62 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்கில் நாளை (ஆகஸ்ட் 23) அன்று வரவு வைக்கப்படும்.
மற்றவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கேச் சென்று கொடுக்கப்படும். மாநில அரசின் இந்த திட்டத்தின் இன்னும் சில பயனாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலமும் ஓய்வூதியத் தொகை விநியோகிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு 8.46 லட்ச பயனர்களுக்கு தற்போது ஓய்வூதியத்தை அளிக்கும். அந்த வகையில், அதற்கும் கேரள அரசு ரூ.48.42 நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பயனர்களுக்கு ஓய்வூதிய மையத்தின் பொது நிதி மேலாண்மை அமைப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ