India Pakistan War Ceasefire: பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்ப்பது, ரகசிய தகவல்களை எதிரிகளிடம் பகிர்ந்ததாக கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாள்களாக நிலவி வந்த பதற்றம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தற்போது தணிந்து வந்துள்ள நிலையில், இந்த ஒரு வாரத்தில் ஹரியானாவில் இருந்து இதுபோல் கைது செய்யப்படும் இரண்டாவது நபர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
India Pakistan War Ceasefire: ரகசிய தகவல்கள் லீக்!
25 வயதான தேவேந்திர சிங் தில்லான் என்ற இந்த நபர் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில் உள்ள கால்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் பயின்று வருகிறார். இவர் பேஸ்புக்கில் பிஸ்டல் மற்றும் துப்பாகிகளின் புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார். இதனால் இவரை கடந்த மே 12ஆம் தேதி ஹரியானாவின் கைதல் நகரில் போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது இவரிடம் விசாரணை மேற்கொண்டதில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருக்கின்றன.
விசாரணையின்போது, தேவேந்திர சிங் கடந்தாண்டு நவம்பர் மாதம் கர்தார்பூர் வழித்தடம் வாயிலாக பாகிஸ்தானுக்கு சென்றதும், அங்கு பல ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிடம் இவர் பகிர்ந்துகொண்டதும் தெரியவந்துள்ளது.
India Pakistan War Ceasefire: பண பரிவர்த்தனை குறித்து விசாரணை
பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகளும் தேவேந்திர சிங் தகவல்களை பகிர நிறைய பணத்தை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முதலாம் ஆண்டு முதுகலை மாணவரான தேவேந்திர சிங், பாட்டியாலா ராணுவ கன்டோன்மென்ட்டின் புகைப்படங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் என கைதல் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்தா மோடி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தேவேந்திர சிங்கின் தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேவேந்திர சிங்கிற்கும், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனை குறித்து அறிய அவரது வங்கிக் கணக்கும் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
India Pakistan War Ceasefire: இன்னும் 3 பேர் கைது!
இவரை போன்றே ஹரியானாவின் பானிபட் நகரில் 24 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டார். 24 வயதான நௌமன் இலாஹி என்பவர் மீது இதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நௌமன், ஹரியானாவில் பாதுகாப்பு காவலராக (Security) பணிபுரிந்து வந்தார். பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டதற்காக, முகவர்களிடம் இருந்து அவரது மைத்துனர், நிறுவன ஓட்டுநர் ஆகியோரின் கணக்கில் பணம் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் மட்டுமின்றி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்ததாக ஒரு பெண் உட்பட இருவரை பஞ்சாப் காவல்துறை கடந்த வாரம் கைது செய்திருந்தது. இவர்கள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு: பஹல்காம் தாக்குதலில் தொடர்பு உள்ளதா?
மேலும் படிக்க | சிந்து நதி நீர் விவகாரம்: இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. ஆனா கண்டிசன் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ