27 வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம்: UP முழுவதும் பலத்த பாதுகாப்பு!!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பலப்படுத்த பாதுகாப்பு!

Last Updated : Dec 6, 2019, 07:15 AM IST
27 வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம்: UP முழுவதும் பலத்த பாதுகாப்பு!! title=

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பலப்படுத்த பாதுகாப்பு!

லக்னோ: டிசம்பர் 6, வெள்ளிக்கிழமை பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட 27 வது ஆண்டு நினைவு தினத்தன்று உத்தரபிரதேசம் முழுவதும் உயர் மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகவல்களின்படி, கோயில் நகரமான அயோத்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிக்க போலீசார் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

கலப்பு மக்கள் தொகை உள்ள இடங்களில் காவல்துறையினர் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், சமூக ஊடகங்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ட்விட்டர் அல்லது பேஸ்புக் பதிவுகள் மூலம் மத உணர்வைத் தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முழு மாவட்டமும் நான்கு மண்டலங்கள், 10 துறைகள் மற்றும் 14 துணைத் துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக அயோத்தி எஸ்.எஸ்.பி ஆஷிஷ் திவாரி தெரிவித்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான சாலைகளில் போலீசார் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் 'பாபர் மசூதி இடிப்பு தினம் வழக்கம் போல அமைதி யான முறையில் துக்க நாளாக கடைபிடிக்கப்படும்; அதில் பங்கேற்பது தனி நபர் விருப்பத்தை பொறுத்தது' என கூறியுள்ளது. ராமஜென்மபூமிக்கு அருகே உள்ள 'தெரி பஜார்' மசூதி நிர்வாகம் 'வழக்கம் போல தொழுகை நடைபெறும்' என தெரிவித்துள்ளது.

கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து தகவல் அளிக்கும்படியும் காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் தண்டவாளங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ராமர்கோவில் கட்ட அனுமதி வழங்கியதுடன், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் அமைப்பு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை குறிவைத்து சமூக விரோதிகள் வன்முறையைத் தூண்டலாம் என்பதால் அயோத்தி உள்பட நாட்டின் முக்கிய இடங்களில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

Trending News