Viral Video Of Man Riding A Car Made Of Bed : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களுக்கு பஞ்சமே கிடையாது. இவற்றில் ஒரு சிலவற்றை பார்ப்பதற்கு, “இப்படியெல்லாம் உலகத்தில் நடக்குதா?” என்று கேட்க தூண்டுவது போல இருக்கும். இன்னும் சில வீடியோக்கள், சினிமாவை காட்டிலும் நம்ப முடியாத அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ:
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒருவர் மெத்தையால் செய்த வாகனத்தில் ரோட்டில் அதிக ஸ்பீடில் சென்று கொண்டிருக்கிறார். தன்னை வீடியோ எடுக்கின்றனர் என்பது தெரிந்தவுடன் அந்த நபர், எழுந்து நின்று ஷாருக்கானின் சிக்னேச்சர் போஸ்-ஐ கொடுக்கிறார். இவரை சுற்றி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருப்பவர்களும் இவரை கோஷம் போட்டு உற்சாகப்படுத்துகின்றனர்.
पश्चिम बंगाल के मुर्शिदाबाद में एक युवक ने खुद ही बेड-कार बनाई है.
ईद के दौरान उसे सड़क पर इस अनोखी गाड़ी को चलाते हुए देखा गया. वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है.#WestBengal #ViralVideo | #SahTalks pic.twitter.com/nCN5fvpCIH
— SACH TALKS (@SachTalks) April 3, 2025
இந்த வீடியோ, மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் எனும் இடத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இவர், ரமலான் நாள்ல், தனது இந்த புதுவித வண்டியை எடுத்துக்கொண்டு வீதியில் உலா வந்து கொண்டிருக்கிறார். அவர சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட, பின்னர் வைரலாகி பிரபலமாகி விட்டார். தனது இந்த மெத்தை-காரை அந்த இளைஞரே உருவாக்கியதாக கூறப்படுகிறது.
காரை பார்த்து வாய்பிளக்கும் நெட்டிசன்கள்:
கட்டிலிலேயே காரை உருவாக்கிய இளைஞரை நேரில் மட்டுமன்றி, சமூக வலைதளம் மூலமாகவும் பலர் பாராட்டி வருகின்றனர். இந்த கட்டிலில், இவர் எப்படி டயர், மோட்டார், ஸ்டீரிங் வீல் என அனைத்தையும் பொருத்தினார் என்பது, பலருக்கும் ஆச்சரியம் தரும் விஷயமாக அமைந்திருக்கிறது. அதே போல, எப்படி எந்தவித பிரச்சனையும் இன்றி, இந்த வண்டி ரோட்டில் செல்கிறது என்பதையும் பலர் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.
பல மில்லியன்களை கடந்தது:
சில நாட்களுக்கு முன்பு பதிவிடப்பட்ட இந்த வீடியோ, தற்போது வரை சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. ஒரு சில நெட்டிசன்கள், இந்த வண்டியை உருவாக்கிய நபரின் கிரியேட்டிவிட்டியை பாராட்டி வருகின்றனர்.
ஒரு சிலர், இந்த வண்டியை வைத்து கேலி பேசி வருகின்றனர். ஒருவர், ”தம்பி, இந்த வண்டிக்கு நம்பர் ப்ளேட் இருக்காப்பா?”என்று கேட்டிருக்கிறார்.இன்னும் சிலர், “இவருக்கு டெக்னாலஜியை பார்த்து பயம் இல்லை, டெக்னாலஜிக்குதான் தம்பியை பார்த்தால் பயம்” என்று கூறி வருகின்றனர்.
இது பாதுகாப்பானதா?
கார், பைக், பேருந்து, ஆட்டோ என அனைத்து வாகனங்களுமே, ஒரு வகையில் மூடப்பட்டு பயணிப்பவர்களுக்கும் ஓட்டுநருக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வகையிலேயே இருக்கும். ஆனால், இந்த வாகனமோ மேற்கூரை, சைட் கதவு எதுவுமின்றி, வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. இதனால், “ஹை-வேயில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பிரேக் அடித்தால், எதை பிடித்துக்கொண்டு கீழே விழாமல் இருப்பார்கள்?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதையடுத்து, சிலர் இதை பார்த்து சிரித்துக்கொள்ளலாம் என்றும், இது பயன்படுத்துவதற்கு ஏற்ற வாகனம் அல்ல என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | பைக் டேங்கில் அமர்ந்து-கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற பெண்! வைரல் வீடியோ..
மேலும் படிக்க | டான்ஸ் ஆடும் போது உயிரிழந்த 23 வயது பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









