)
Uttar Pradesh Mathura News: நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருமக்களால் பக்ரீத் பண்டிகை நேற்று (ஜூன் 7) மகிழ்ச்சிகரமாகவும், அமைதியான முறையிலும் கொண்டாடப்பட்டது.
Uttar Pradesh Mathura News: மதுராவில் பிரச்னை
இருப்பினும் உத்தர பிரதேசத்தின் மதுராவில் பசுவின் பெயரில் சர்ச்சைய கிளப்ப சில விஷமிகள் திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால், போலீசார் தக்க நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டிருக்கிறது. பக்ரீத் பண்டிகையான நேற்று (ஜூன் 7), மதுராவில் உள்ள கோவர்தன்-பர்சானா சாலையில் உள்ள இந்து வழிபாட்டு தலம் அருகே பசுக்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் தகவல்கள் கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்த அறிந்த உடன் இந்து அமைப்புகள் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
Uttar Pradesh Mathura News: போலீசார் நடவடிக்கை
இதனால், அங்கு இந்து - இஸ்லாமியர் இடையே பதற்றம் ஏற்படும் சூழல் உருவான நிலையில், சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, 70க்கும் மேற்பட்டோர் மீது மதுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்த விவகாரம் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் இஸ்லாமியர்களின் தரப்பு தெரிவித்துள்ளது. காவல்துறையினர் பலரை கைது செய்துள்ள நிலையில், தற்போது இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சமும் பீதியும் நிறைந்த சூழல் நிலவுகிறது.
Uttar Pradesh Mathura News: இந்து அமைப்புகள் எதிர்ப்பு
தொடர்ந்து இந்த விவகாரத்தில் பல இந்து அமைப்புகள் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வன்முறை பிரச்சாரத்தைத் தொடங்க இருப்பதாகவும் இந்து அமைப்புகள் அச்சுறுத்தியுள்ளன.
அயோத்தியின் இந்து மதத் தலைவர் என்று கூறப்படும் அயோத்தியின் இந்திரேஷ் கௌசிக் என்பவர் ஊடகங்களிடம் பேசுகையில், நாட்டின் அமைதியை விரும்பும் மக்களின் பதற்றம் இப்போது அதிகரித்துள்ளது என்றார். மேலும் இதைத் தொடர்ந்து அவர்கள் (இஸ்லாமியர்கள்) செய்தால், தலையில் வெள்ளைத் தொப்பியைப் போட்டுக்கொண்டு, முகத்தில் இருந்து தாடியை பிடுங்கிவிடுவேன் என மிரட்டல் விடும் தொனியில் பேசினார்.
Uttar Pradesh Mathura News: இந்திரேஷ் கௌசிக் சர்ச்சை பேச்சு
சர்ச்சைக்குரிய விதமாக இந்திரேஷ் கௌசிக் இந்த பேச்சை தொடர்ந்தார். அதில் அவர், "மதுராவில், எங்கள் பசுக்கள் சாலைகளில் படுகொலை செய்யப்பட்டுள்ளன, பசுக்களின் எச்சங்கள் வீசப்பட்டுள்ளன, அவற்றின் ரத்தம் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. இது மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கும் என்பது உறுதி. இப்போது அவர்களின் (இஸ்லாமியர்கள்) முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது" என்று சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் விதமாக பேசினார்.
Uttar Pradesh Mathura News: இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல்
இஸ்லாமியர்கள் சாலைகளிலும், ரயில்களிலும் தொழுகை நடத்துவதைத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் தொழுகை நடத்த முடியாதபோது, அதற்கு பதிலடியாக இந்துக்களுக்குக் காட்டும் விதமாக பசுக்களை கொல்கிறார்கள். அவர்கள் பசுக்களை கொலை செய்தால், அதாவது பசு எங்களுக்கு தாய்... அப்படி செய்தால் அவர்கள் போருக்கு அழைப்பு விடுத்து சவால்விடுவது போன்றது. எனவே நாங்களும் தயாராக இருக்கிறோம். இனி அவர்கள் தலையில் வெள்ளைத் தொப்பி அணிய மாட்டார்கள், முகத்தில் நீண்ட தாடி இருக்காது. அவற்றை பிடுங்கி எறிவோம்" என அச்சுறுத்தும் விதமாக பேசினார்.
மேலும் கூறுகையில், "ஒரு முறை தவறு நடந்துவிட்டது. இப்போதும் கூட, அவர்களின் தவறுகளை சரிசெய்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை சரிசெய்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் போருக்கு சவால் விடப்பட்டுள்ளோம் என அர்த்தம். எனவே நாங்கள் போராடுவோம்" என பேசியிருக்கிறார். இந்திரேஷ் கௌஷிக்கின் இந்த பேச்சு மதுராவில் இஸ்லாமிய மக்கள் இடையே கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ