கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழப்புகள் மற்றும் பக்கவிளைவுகளால் நாடே கவலையடைந்துள்ளது. இந்த சூழ்நிலயில் கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, வெள்ளை பூஞ்சை என வேறுவிதமான சுகாதார சவால்களும் எழுந்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் ஒருவருக்கு மூன்று பூஞ்சைத் தொற்றுக்களும் (கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, வெள்ளை பூஞ்சை) பாதித்துள்ளது. மே 24ஆம் தேதியன்று ஒரு நோயாளிக்கு எண்டோஸ்கோபி (endoscopy) பரிசோதனை செய்தபோது அவருக்கு கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மூன்று தொற்றுகளால் பாதிக்கப்பட்ட குன்வர் சிங் (Kunwar Singh) என்ற நோயாளியை கொரோனா தொற்றும் விட்டு வைக்கவில்லை. நான்கு தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட குன்வர் சிங் வெள்ளிக்கிழமையன்று உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்ஜாபாத்தின் ராஜ் நகர் பகுதியில் உள்ள ஹர்ஷ் மருத்துவமனையின்  காது, மூக்கு, தொண்டை (ENT specialist) நிபுணர் டாக்டர் பி பி தியாகி இந்த தகவலை உறுதி செய்தார். மேலும், குன்வர் சிங், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அவர் மூன்று பூஞ்சைத் தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிவித்தார். 
59 வயதான குன்வர் சிங் ஒரு வழக்கறிஞர் என்றும், சில நாட்களுக்கு முன்பு COVID-19 அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனைக்கு வந்தார் என்றும் மருத்துவர் தியாகி தெரிவித்தார். மே 24 அன்று எண்டோஸ்கோபி பரிசோதனை செய்தபோது கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. குன்வர் சிங், ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்ததால் காலமானார் என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
தங்கள் மருத்துவமனையில் மற்றொரு நபருக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று பாதிப்புள்ள ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் தியாகி தெரிவித்தார். நோயாளியின் மூளைக்கு அருகில் மஞ்சள் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த நோயாளி மிகவும் கவனமாக கண்காணிக்கப்படுகிறார் என்றும், அவருக்கு டாக்ஸீமியா (toxemia) பாதிப்பும் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் குன்வர் சிங்குக்கு இருந்ததை விட இந்த நோயாளிக்கு தொற்று அளவு குறைவாக உள்ளது என்று டாக்டர் தியாகி குறிப்பிட்டார். நோயாளிக்கு தற்போது பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் (anti-fungal medication) கொடுக்கப்படுவதாக தெரிகிறது.
தொற்று நோய்கள் சட்டத்தின் (Epidemic Diseases Act) கீழ் கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமிகோசிஸை ஒரு குறிப்பிடத்தக்க நோயாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Also Read | முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி காலமானார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR