)
Crime News In Tamil: டெல்லியில் பெற்ற தாயை மகனே இரு முறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 65 வயதான தாயை 'தண்டனை' என்ற பெயரில் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளனர்.
39 வயதான மகன் அவனது 65 வயதான தாயை இருமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தாயார் தனது சிறுவயதில் தவறான உறவில் இருந்தார் என்றும், அதற்கான தண்டனை என்றும் கூறி பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு பாரதீய நியாய சன்ஹிதா பிரிவு 64 (பாலியல் பலாத்காரம்) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்தனர். குற்றவாளி தற்போது காவலில் உள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண் தனது 25 வயது இளைய மகளுடன் சேர்ந்து டெல்லி ஹவுஸ் காஜி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குடும்பம் சௌதி அரேபியாவில் மத யாத்திரை முடித்து டெல்லி திரும்பிய சில நாட்களிலேயே பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடந்தது.
புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மகன் மற்றும் இளைய மகளுடன் டெல்லியின் ஹவுஸ் காஜி பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமான மூத்த மகளும் உள்ளார். மூத்த மகள் அருகில் உள்ள பகுதியில் தனது மாமியார் வீட்டில் வசிக்கிறார்.
ஜூலை 17ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவர் மற்றும் இளைய மகள் சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்தனர். அந்தக் காலத்தில், குற்றவாளி தனது தந்தையிடம் தொலைபேசியில் அழைத்து உடனடியாக டெல்லிக்குத் திரும்புமாறு வற்புறுத்தினார். மேலும் தாயிடம் விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தாயார் தனது சிறுவயதில் தவறான உறவில் இருந்ததாக மகன் குற்றஞ்சாட்டினார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று தாயார் டெல்லி திரும்பியபோது, குற்றவாளி தாயை ஒரு அறையில் பூட்டிவைத்து, புர்காவை கழற்றச் செய்து தாக்கியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அவர், 'சிறுவயதில் நீ என்னைக் கெடுத்துவிட்டாய்' என்று தாயிடம் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது மூத்த மகளின் வீட்டில் தங்கினார். ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று தாய் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியபோது, துன்புறுத்தல் தொடர்ந்தது. அந்த இரவு சுமார் 9.30 மணிக்கு, குற்றவாளி குடும்பத்தினரிடம் தாயுடன் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி, அவரை அறையில் பூட்டிவைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவர், 'கடந்தகாலத்தில் வைத்துக்கொண்டு தகாத உறவுகளுக்கான தண்டனை' எனக் கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று அதிகாலை 3.30 மணியளவில் குற்றவாளி மீண்டும் தாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று, பெண் தனது இளைய மகளிடம் நடந்ததைப் பகிர்ந்துகொண்டார். மகள் தாயை புகார் அளிக்கத் தூண்டியதால், இருவரும் ஹவுஸ் காஜி காவல் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகனே இரு முறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ