Hoax Bomb Threats Woman Arrested: வெடிகுண்டு மிரட்டல் இந்த காலகட்டத்தில் அதிகமாக எழுவதை பார்க்க முடிகிறது எனலாம். முக்கிய தலைவர்களின் வீடுகள், மக்கள் கூடும் இடங்கள், விமான நிலையங்களில் பல முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதை செய்திகளில் நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.
ஆனால், மிரட்டல் வந்த இடங்களை சோதனை செய்தால் வெடிகுண்டு ஏதும் இருக்காது. அவை வெடிகுண்டு மிரட்டல் அல்ல, வெற்று மிரட்டல் என அப்போதுதான் தெரியும். இருப்பினும் அந்த வெடிகுண்டு மிரட்டல்களை சாதரணமாக எடுத்துக்கொள்ளவும் இயலாது. வெற்று மிரட்டல்களை விடுத்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
Hoax Bomb Threats Woman: 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்த சூழலில், சென்னையை சேர்ந்த 30 வயது ரோபோடிக்ஸ் பொறியாளரான ரெனே ஜோஷில்டா, 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அகமதாபாத் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். ரெனே தான் ஒருதலைபட்சமாக காதலித்த நபரின் பெயரை பயன்படுத்தி போலியாக பல மின்னஞ்சல் கணக்குகளை தொடங்கி அதன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ளார்.
அந்த நபர் ரெனேவின் காதலை ஏற்காமல், வேறொரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இதற்கு பழிவாங்கவே அந்த நபரின் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்குகளை தொடங்கி அவரை சிக்கவைக்க திட்டமிட்டுள்ளார். ரெனே பல மாதங்களாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அதாவது VPN வசதிகளை பயன்படுத்தியும், போலி மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுததியும் பல்வேறு மாநிலங்களுக்கு இவர் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ளார். இதன்மூலம் இதன் பின்னிருப்பவரை பிடிக்க பல மாநில போலீசார் திணறி உள்ளனர். ஆனால் ரெனே செய்த ஒரே ஒரு தவறு அவரை சிக்கவைத்துவிட்டது எனலாம்.
Hoax Bomb Threats Woman: ரெனே ஜோஷில்டாவின் ஒரன்சைட் லவ்
போலீசார் அளித்த தகவலின்படி, ரெனே ஜோஷில்டா சென்னையில் தனது பொறியியல் படிப்பை நிறைவு செய்திருக்கிறார். ரோபோடிக்ஸ் படிப்பில் அவர் பட்டம் பெற்றிருக்கிறார். சென்னையில் உள்ள Deloitte என்ற நிறுவனத்தில் ரெனே senior consultant பொறுப்பில் இருந்துள்ளார். இவர் பெங்களூருவில் தனது வேலை நிமித்தமாக சென்றிருந்தபோது திவிஜ் பிரபாகர் என்பவரை சந்தித்துள்ளார், இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ரெனே அவரை ஒருதலையாக காதலித்துள்ளார். ரெனேவின் காதலை திவிஜ் ஏற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் திவிஜ் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது ரெனேவுக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது, இதனாலேயே இந்த பழிவாங்கும் படலத்தை தொடங்கி உள்ளார்.
Hoax Bomb Threats Woman: அகமதாபாத்தில் 21 இடங்கள்...
இவர் திவிஜ் பிரபாகரனின் பெயரில் பல்வேறு போலி மின்னஞ்சல் கணக்குகளை தொடங்கி பள்ளிகள், மருத்துவமனை, விளையாட்டு மைதானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களை கொடுத்துள்ளார். குறிப்பாக, அகமதாபாத் நகரில் மட்டும் 21 இடங்களுக்கு ரெனே வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதிலும் மொடிராவில் நரேந்திர மோடி மைதானம், சர்கேஜ்ஜில் உள்ள ஜெனீவா லிபரல் பள்ளி, அரசு மருத்துவமனைகள் ஆகியவை அடக்கம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hoax Bomb Threats Woman: அகமதாபாத் விமான விபத்து
மேலும், அகமதாபாத் குற்றப்பிரிவு இணை காவல் ஆணையாளர் ஷரத் சிங்கல் கூறியதாவது, பொது ஊர்வலங்கள் மற்றும் விவிஐபி வருகைகளுக்கு முன்னர் 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டன. இந்த மிரட்டல்களால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர், காவலுக்கான படைகள் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் வெற்று மிரட்டல்கள். குஜராத் மட்டுமின்றி தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, கர்நாடகா, கேரளா, பீகார், தெலங்கானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு இவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, இவர் அகமதாபாத் பிஜே மருத்துவமனைக்கு அனுப்பிய மின்னஞ்சல்தான் போலீசார் இவரை நெருங்க வைத்திருக்கிறது எனலாம். கடந்த ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், இந்த பிஜே மருத்துவமனையில் மோதியே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வு நாட்டையே உலுக்கியது எனலாம்.
Hoax Bomb Threats Woman: மருத்துவமனைக்கு வந்த மெயில்
இந்த விபத்துக்கு பின்னர், பிஜே மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மின்னஞ்சல் ஒன்றை பெற்றுள்ளது. அதில், "இப்போது உங்களுக்கு எங்களின் வலிமை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நேற்று நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது போல, முன்னாள் முதல்வர் (விஜய் ரூபானி) உடன் ஏர் இந்தியா விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்கினோம். விமான விபத்து ஒரு புரளி என்று போலீசார் நினைத்து அதைப் புறக்கணித்திருப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எங்கள் விமானிக்கு வாழ்த்துக்கள். இப்போது நாங்கள் விளையாடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது உங்களுக்குத் புரிந்திருக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.
Hoax Bomb Threats Woman: சிறிய தவறால் சிக்கிய பெண்
ஷரத் சிங்கல் இதுகுறித்து கூறுகையில், "மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்க அவர் பயன்படுத்திய எண் மெய்நிகர் ஆகும். அவர் Tor Browser (அடையாள தெரியாமல் தொடர்புகொள்ள) மூலம் மிரட்டல்களை விடுத்திருந்தார். டார்க் வெப் மூலம் அச்சுறுத்தல் மின்னஞ்சல்களை அனுப்பினார். அவர் நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
அவர் மிகவும் புத்திசாலி மற்றும் அவருடைய டிஜிட்டல் தடயத்தை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர் ஒரு சிறிய தவறைச் செய்தார். எங்கள் சைபர் குற்றப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவு அவரை கண்டுபிடித்துவிட்டது" என்றார். ரெனே ஜோஷில்டா ஆறு மாதங்களுக்கு முன்பே அந்த ஒரு தவறு செய்திருக்கிறார். அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதிலும், ஒரு சந்தர்ப்பத்தில் அதே சாதனத்தில் இருந்து தனது உண்மையான மற்றும் போலி மின்னஞ்சல் கணக்குகளில் உள்நுழைந்ததை சைபர் குற்றப் பிரிவினர் கண்டறிந்தனர். இது அவளுடைய IP Address-ஐ அம்பலப்படுத்தியது. இதுவே அவரை கண்டுபிடிக்க உதவியிருக்கிறது.
மேலும் படிக்க | உயர்கிறது ரயில் டிக்கெட் விலை... எவ்வளவு தெரியுமா? ஜூலை 1 முதல் அமல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









