Bihar Assembly Election 2025, NDA Seat Sharing: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் தற்போது தொடங்கியிருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடுகளும் தற்போது உச்சத்தை அடைந்துள்ளன.
NDA: தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யார்?
பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Mahagathbandhan: மகாபந்தன் கூட்டணியில் யார் யார்?
எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணியில் தேஜஸ்வி யாதவ் தலைமை வகிக்கிறார். தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விகாஷீல் இன்சான் கட்சி உள்ளிட்டவை உள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 243 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
Bihar Election 2025: உச்சத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
வரும் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரே மாத காலமே இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் மொத்தம் 243 தொகுதிகளில் அதிக இடங்களில் போட்டியிடும்.
அப்படியிருக்க, சிராக் பஸ்வான் மற்றும் ஜிதன் ராம் மஞ்சி ஆகியோர் கடந்த மக்களவை தேர்தலில் சிறப்பாக செயலாற்றியதை வைத்து அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. அப்படியிருக்க, அவர்களின் கோரிக்கைக்கு பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் ஒப்புதல் அளித்து தொகுதிகளை கூடுதலாக ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
Bihar Election 2025: எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட்?
அந்த வகையில், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு சுமார் 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், லோக் ஜனசக்தி மொத்தம் 135 தொகுதிகளில் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டது. அதில் ஐக்கிய ஜனதா தளத்தின் 25 வேட்பாளர்களை தோற்கடித்தனர். இதன் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் 35 இடங்களை லோக் ஜனசக்தி கட்சி கேட்டுவந்தது. ஆனால், தற்போது இருதரப்பும் 26 தொகுதிகளுக்கு ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது.
மறுபுறம், ஜிதன் ராம் மஞ்சி தனது கட்சிக்கு 15 தொகுதிகளை கேட்டதாகவும் அவருக்கு 8 தொகுதிகள் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியிருப்பதன் மூலம் மீதம் 202 தொகுதிகள் இருக்கும். இதில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து 100-101 தொகுதிகள் என தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும் என தெரிகிறது. இவை அனைத்தும் தகவல்களே, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லைய
மேலும் படிக்க | பீகார் தேர்தல் 2025: வாக்காளர்களை ஈர்க்கும் 5 முக்கிய தலைவர்கள் - யார் யார் பாருங்க!
மேலும் படிக்க | பேஸ்புக் லைவ்வில் கணவன் த*கொலை முயிற்சி... அப்படி மனைவி என்ன செய்தார்? பரபர சம்பவம்
மேலும் படிக்க | விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! வங்கி கணக்கில் வரவிருக்கும் ரூ.2000! எப்படி பெறுவது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









