Diwali 2025, Indian Railways: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்டபோர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதியும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அன்று காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, வழிபாடு செய்து, விதவிதமான உணவுகளை சாப்பிட்டு, இனிப்பு மற்றும் பலகாரங்களை பகிர்ந்து, வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவோம். இதுவே வழக்கமான மற்றும் மகிழ்ச்சிகரமான தீபாவளி என்றும் சொல்லலாம்.
Diwali 2025: தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான்...
அதேநேரத்தில் தீபாவளி அன்று ரிலீஸாகும் திரைப்படங்களை அன்றே திரையரங்குகளில் பார்ப்பது, தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் பார்ப்பது என்பதும் பலரின் கொண்டாட்டமாக இருக்கிறது. அப்படியிருக்க, இவை அனைத்தையும் செய்தாலும் கூட தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதே அதில் உச்சக்கட்ட கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பழக்கம் இருந்து வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக பட்டாசு வெடிப்பதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புடனும், கட்டுப்பாடனும் பட்டாசு வெடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், வெளியூர்களில் பணிபுரியும் மக்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று தீபாவளியை கொண்டாட நினைப்பார்கள். இதனால், பேருந்துகளிலும், ரயில்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பார்கள்.
Indian Railways: சிறை தண்டனை...
இந்தச் சூழலில், ரயில்களில் பயணிக்கும்போது பயணிகள் தங்களுடன் பல பொருள்களை கொண்டுசெல்வார்கள். இனிப்பு, பலகாரங்கள், புது துணிகள், பொம்மைகள் ஆகியவற்றை கொண்டுசெல்லலாம். அதோடு சிலர் பட்டாசுகளையும் கொண்டுசெல்வார்கள். அங்குதான் பெரிய சிக்கல் இருக்கிறது. ரயில்களில் பயணிகள் பட்டாசுகளை, வெடிகளை கொண்டுவந்தால் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Indian Railways: ஏன் பட்டாசு கொண்டுசெல்ல தடை?
ரயிலில் பட்டாசுகளை கொண்டுச்சென்றால் உங்களுக்கு சிறை தண்டனை பெறவும் வாய்ப்புள்ளது. ரயில்வே விதியின்படி, எளிதில் தீப்பிடிக்கும் அல்லது வெடிக்கும் பொருள்களுடன் ரயில்களில் பயணிக்க தடை உள்ளது. அதில் பட்டாசுகள், வெடிகள், ராக்கெட் வெடிகள் ஆகியவையும் அடங்கும்.
ரயில்களில் பட்டாசுகளை கொண்டுச்செல்வதால் விதிகளை மீறுவது மட்டுமின்றி, அதே ரயிலில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். அதாவது, சிறு தீப்பொறி ஏற்படுவதன் மூலமோ அல்லது தவறு நடந்தாலோ மொத்த ரயிலும் தீப்பிடித்துவிடும் ஆபத்து உள்ளது.
Indian Railways: பட்டாசு கொண்டு சென்றால் என்ன தண்டனை?
இதனால், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி காலகட்டத்தில் ரயில்வே பாதுகாப்புத் துறை பயணிகளிடம் கடுமையாக சோதனை செய்வார்கள். தீவிர கண்காணிப்பிலும் ஈடுபடுவார்கள். இதுபோன்ற ஆபத்தான பொருட்களில் இருந்து விலகி இருக்குமாறு பயணிகளும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இந்திய ரயில்வே விதிகளின்படி, பயணத்தின் போது ஒரு பயணி தடைசெய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் எடுத்துச் சென்றால், ரயில்வே சட்டத்தின் பிரிவு 164-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரிவின் கீழ், பயணிக்கு 1,000 ரூபாய் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படலாம்.
மேலும் படிக்க | பயணிகளுக்கு புதிய அப்டேட்டை வழங்கிய இந்தியன் ரயில்வே.. உடனே தெரிஞ்சிக்கோங்க
மேலும் படிக்க | Indian Railways: இனி வெயிட்டிங் டிக்கெட் கிடையாது, ரயில்வே புதிய சேவை தொடக்கம்
மேலும் படிக்க |தமிழ்நாட்டில் மட்டும் தீபாவளியை 1 நாள் முன்னரே கொண்டாடவது ஏன்? காரணம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









