பாக்., ஊடகங்களுக்கு தீனியாய் அமைந்த நவாஜோத் சிங் சித்து!

பாக்கிஸ்தான் உடனான நட்பினை இந்திய மக்கள் நாடுகின்றனர். ஆனால் இந்திய ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் மக்களின் என்னத்தினை வெளிக்காட்ட மறுக்கின்றனர்

Updated: Dec 6, 2018, 05:12 PM IST
பாக்., ஊடகங்களுக்கு தீனியாய் அமைந்த நவாஜோத் சிங் சித்து!
Screengrab

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தின் போது அல்வாரில் காங்கிரஸ் தலைவர் நவாஜோத் சிங் சித்து உரையாற்றிய போது எழுப்பப்பட்ட "பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்" கோஷங்கள் தற்போது பாக்கிஸ்தான் ஊடகங்களுத்து தீனியாய் அமைந்துள்ளது!

குறிப்பிட்ட பிரச்சாரத்தின் போது கூட்டத்தில் பங்கேற்ற சிலர் பாக்கிஸ்தான் சார்புக் கோஷங்களை எழுப்பினர். இந்த வீடியோவினை ZEE News செய்தியாக வெளியிட்டது. செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ பாக்கிஸ்தான் உள்ளூர் ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. செய்தியை வாசித்த செய்தியாளர் "பாக்கிஸ்தான் உடனான நட்பினை இந்திய மக்கள் நாடுகின்றனர். ஆனால் இந்திய ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் மக்களின் என்னத்தினை வெளிக்காட்ட மறுக்கின்றனர்" என குறிப்பிட்டு செய்தியினை பரப்பினர். இந்த விவகாரம் இந்தியாவினை மட்டுமல்லாமல் பாக்கிஸ்தான் மக்களிடையேயும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ZEE News-க்கு எதிராக சமூக ஊடகங்களில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். சில ஊடகங்களும், செய்தியாளர்களும் காங்கிரஸ் தொண்டர்களின் செயல்பாட்டிற்கு ஆதரவு அளித்து செய்திகளை பரப்பினர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் கவனம் கொண்ட ZEE News, உண்மையினை மக்களுக்கு வெளிபடுத்து கடமைப்பட்டுள்ளது.

ZEE News குழு, சித்துவின் அல்வார் பேரணியில் கலந்து கொண்ட பொது மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொண்டது. குறிப்பிட்ட பேரணியின் போது பத்திரிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்ட 7 வெவ்வேறு வீடியோக்களை ZEE News பெற்று ஆய்வு நடத்தியது. இந்து ஆய்வில், சித்துவின் பேரணியில் எங்கிருந்து "பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்" என்ற கோஷம் எழுந்தது என்பதினையும் வெளிக்காட்டியது.