இந்தியாவில் சுகாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பதஞ்சலி.. எவ்வாறு?

பதஞ்சலி மருத்துவத்தில் மட்டுமல்லாமல், பண்டைய ஆயுர்வேத புத்தகங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றை வெளியிடுவதிலும் கவனம் செலுத்துகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 3, 2025, 06:58 PM IST
  • பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சையை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும்.
  • ஆயுர்வேதத்தையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்தல்.
இந்தியாவில் சுகாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பதஞ்சலி.. எவ்வாறு?

மக்கள் தங்கள் உடல்நலம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து அதிகம் கவனத்துடன் இருக்கின்றனர். அந்தவகையில் தற்போது பதஞ்சலி ஆராய்ச்சி கண்டுபிடிப்பு (Patanjali Research Innovation)இந்தியாவின் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக ஆயுர்வேதத்தையும் நவீன அறிவியலையும் இணைத்து பல மருந்துகளையும் சிகிச்சைகளையும் உருவாக்கி வருகின்றனர். மேலும் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சையை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க ஒரு வலுவான அடிப்படையை வழங்குகிறது.

Add Zee News as a Preferred Source

இப்போது முக்கிய கேள்வி என்னவென்றால் பதஞ்சலி ஆராய்ச்சி கண்டுபிடிப்பு இந்தியாவில் சுகாதாரத்தின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதே. இதற்கான பதிலை இங்கே காண்போம்.

ஆயுர்வேதத்தையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்தல்:
பதஞ்சலி நிறுவனமானது பாரம்பரிய மூலிகைகளைப் பயன்படுத்துவதோடு ஆயுர்வேதத்தை நவீன அறிவியல் ஆராய்ச்சியுடன் இணைத்து செயல்படுகிறது. உதாரணமாக, கடந்த 2024 ஆம் ஆண்டில், பதஞ்சலி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா, காசநோய் (TB) சிகிச்சைக்கான மூலிகை மருந்துகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 'சோட்டி கட்டேலி' (Solanum virginianum extract - SVE) நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். இதன் மூலம் காசநோய் நோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இது தற்போது பெரிய அளவில் உதவிகரமாக இருக்கிறது.

பதஞ்சலியின் மருத்துவ சேவைகள்:
பதஞ்சலியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் பல மருத்துவ சேவைகளும் உள்ளன. இதில் பல வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மூலிகை மருந்துகள் அடங்கும். பதஞ்சலியின் பணி மலிவு விலையில் தீர்வுகளை வழங்குகிறது என்று ஆராய்ச்சியில் காட்டப் பட்டுள்ளது. இதன் மூலம் காசநோய்க்கான மூலிகை சிகிச்சையைப் போல, விலையுயர்ந்த மருந்துகளிலிருந்து நிவாரணம் பெற முடிகிறது. இதனுடன், வீட்டு வைத்தியங்களை ஊக்குவிக்கும் 5,500 க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்களைப் பற்றிய தகவல்களை கொண்டுள்ளனர்.

இதில் மிக சிறந்த விஷயம் என்னவென்றால், பதஞ்சலி ஆயுர்வேதத்தை உலக அளவில் ஊக்குவிக்க விரும்புகிறது, இதன் மூலம் சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா முன்னணியில் இருக்க முடியும்.

நம்பகமான ஆராய்ச்சி:
பதஞ்சலியின் ஆராய்ச்சி NABL, DSIR, DBT போன்ற இந்திய அரசின் தரநிலைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. மேலும் அவர்கள் SRM CCTR போன்ற பிற நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்களின் ஆராய்ச்சியை மிகவும் நம்பகமானதாகவும், அறிவியல் முறைகளை வலுப்படுத்தவும் செய்கிறது. இதன் மூலம் மக்களின் நம்பிக்கை இந்த நிறுவனத்தின் மேல் அதிகமாகக்கூடும்.

இது தவிர, பதஞ்சலி மருத்துவத்தில் மட்டுமல்லாமல், பண்டைய ஆயுர்வேத புத்தகங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றை வெளியிடுவதிலும் கவனம் செலுத்துகிறது. ஏனெனில் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் புதிய ஆராய்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும், மேலும் ஆயுர்வேதத்தை நன்கு புரிந்துகொள்ளவும் மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | பதஞ்சலி ஆயுர்வேதப் பொருட்கள்: நவீன வாழ்க்கையில் இயற்கை மருத்துவத்திற்கு புதிய பரிமாணம்

மேலும் படிக்க | பதஞ்சலியின் வரலாற்றுச் சாதனை: உலகின் புகழ்பெற்ற ஜர்ணலில் சேர்க்கப்பட்டது சிறப்பு ஆராய்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News