Medical College Seat Couselling: நீட் 2025 தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் சூழலில், மருத்துவ சீட்டை பெறுவது எப்படி, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

NEET 2025, Medical College Seats Couselling: இளநிலை நீட் 2025 தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீங்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெறுவதை தாண்டி மருத்துவக் கல்லூரியில் சீட் பெறுவதற்கு கட் ஆப் மதிப்பெண்ணும் மிக முக்கியமாகும். தற்போது தேர்வு முடிவுகளோடு கட் ஆப் மதிப்பெண்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் இந்த சூழலில், எம்பிபிஎஸ், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வதும் அவசியமாகும். அவற்றை இங்கு விரிவாக காணலாம். இருப்பினும் அதை காண்பதற்கு முன், இந்தாண்டுக்கான கட்ஆப் மதிப்பெண் விவரங்களை முதலில் பார்க்கலாம்.
NEET 2025: நீட் 2025 கட் ஆப்
| பிரிவு | கட் ஆப் மதிப்பெண்கள் | தேர்ச்சியைடந்த மாணவர்கள் எண்ணிக்கை |
| பொதுப்பிரிவினர் / பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் | 684-114 | 11,01,151 |
| மற்ற பின்தங்கிய வகுப்பினர் | 143-113 | 88,692 |
| பட்டியல் வகுப்பினர் | 143-113 | 31,995 |
| பட்டியல் பழங்குடியினர் | 143-113 | 13,940 |
| பொதுப்பிரிவு, EWS - மாற்றுத்திறனாளிகள் | 143-127 | 472 |
| ஒபிசி - மாற்றுத்திறனாளிகள் | 126-113 | 216 |
| பட்டியல் வகுப்பு - மாற்றுத்திறனாளிகள் | 126-113 | 48 |
| பட்டியல் பழங்குடியினர் - மாற்றுத்திறனாளிகள் | 126-113 | 17 |
Medical College Seats: மொத்தம் எத்தனை மருத்துவ சீட்கள்?
நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்ததும், மருத்துவ படிப்புகளில் சேர முதலில் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். அதன்படியே, கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும். கவுன்சிலிங்கிலேயே அகில் இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு என இரண்டு வகைகள் உள்ளன. அவை குறித்தும் இங்கு பார்ப்போம்.
நாடு முழுவதும் மொத்தம் 780 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு 1 லட்சத்து 18 ஆயிரத்து 190 சீட்டுகளும், பல் மருத்துவத்திற்கு 27 ஆயிரம் சீட்டுகளும் உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 1200 சீட்கள் உள்ளன. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு என்ற அடிப்படையில்தான் மாணவ சேர்க்கை நடைபெறும்.
Medical College Couselling: 2 வகை கவுன்சிலிங்
அந்த வகையில், அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், அனைத்து எய்ம்ஸ் மற்றும் மத்திய நிறுவன இடங்கள் ஆகியவை 15 சதவீதத்தை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். மறுபுறம், மாநில ஒதுக்கீடு என்பது மீதமுள்ள 85 சதவீதம் அரசு கல்லூரி இடங்கள் மற்றும் அனைத்து தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக இடங்களும் அடங்கும் எனலாம்.
All India Quota: அகில் இந்திய ஒதுக்கீடு கவுன்சிலிங்
மருத்துவ ஆலோசனைக் குழுவே கவுன்சிலிங் செயல்முறையை நடத்தும். இதன் போது, விருப்பமான கல்லூரியை பதிவுசெய்து உறுதிசெய்ய வேண்டும். இதன் பிறகு, மாணவர் அந்தக் கல்லூரிக்குச் சென்று தனது அனைத்து முக்கிய ஆவணங்களையும் சமர்பித்து, அவை கல்லூரி நிர்வாகத்தினரால் சரிபார்க்கப்பட வேண்டும். அவை சரியாக இருக்கும்பட்சத்தில் மாணவர் அந்த சீட்டை பெறுவார்.
இதற்கு மாணவர்கள் முதலில் mcc.nic.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு நீட் தேர்வின் ரோல் எண் உட்பட தேவையான அனைத்து விவரங்களும் உள்ளீடு செய்ய வேண்டும். வேட்பாளர் தனக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடத்திட்டத்தை (MBBS/BDS) தேர்ந்தெடுக்க வேண்டும். இது கட்டாயமாகும். இல்லையெனில் உங்கள் விண்ணப்பம் ரத்து செய்யப்படும். அதன்பின், மாணவரின் தரவரிசை அடிப்படையில், அவருக்கு விருப்பமான கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும். இதற்கு பல கட்டங்கள் உள்ளன. இதற்குப் பிறகு, ஆவணங்கள் மற்றும் கட்டணங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
State Quota: மாநில ஒதுக்கீடு கவுன்சிலிங்
இதனை அந்தந்த மாநிலத்தின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஏற்பாடு செய்கிறது. தேவையான அனைத்து தகவல்களும் மாநில கவுன்சிலிங் இணையதளத்தில் கிடைக்கும். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒரு சான்றிதழ் தேவைப்படுகிறது, இது கட்டாயமாகும். மற்றபடி கல்லூரியை தேர்வு செய்து சீட்டை பெறுவது அனைத்தும் அகில் இந்திய ஒதுக்கீட்டை போன்றதுதான்.
NEET 2025: கவுன்சிலிங்கிற்கு தேவையான ஆவணங்கள்
நீட் தேர்வின் அட்மிட் கார்டு, மாணவர்களின் மதிப்பெண் அட்டை, பிறப்பு சான்றிதழ், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இட ஒதுக்கீட்டுக்கான சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை அல்லது மற்ற அரசு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ