)
Rare Earth Elements: சீனா தொடர்ந்து இந்தியாவுக்கு பல்வேறு தளங்களில் நெருக்கடி அளித்து வருகிறது. இருப்பினும் இந்திய அரசு அதில் இருந்து வெளிவந்து முன்னேற்றத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை தடை செய்வதற்கு சீனா முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இனிமேல் சீனாவின் அந்த கனவு பலிக்காது எனலாம்.
இந்திய அரசு மிக மிக அரிதான உலோகத்தை கண்டெடுத்துள்ளது, இதன்மூலம் சீனாவின் சதித்திட்டங்கள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். சிங்க்ரௌலி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து அதிகளவிலான அரிய கனிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது இது அரிய வகை பூமி தனிமங்கள் துறையில் இது பெரிய முன்னேற்றம் என்றும் கூறப்படுகிறது. சீனா அரிய வகை பூமி தனிமங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தப்போவதாக கூறப்படும் நிலையில், தற்போது இந்த நல்ல செய்தி வந்திருக்கிறது எனலாம். சிங்க்ரௌலி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலகரி மற்றும் நிலகரி அல்லாத பொருள்களில் இருந்து சுமார் 250 ppm மற்றும் 400 ppm அளவிலான அரிய வகை பூமி தனிமங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அரிய பூமி தனிமங்கள் என்பது பூமியின் மேற்பகுதியில் ஒப்பீட்டளவில் மிகுதியாகக் காணப்படும் 17 உலோகத் தனிமங்களின் குழு எனலாம். இவை அரிய வகை என குறிப்பிடப்பட்டாலும் மிகுதியாகக் காணப்படும். ஆனால், இவற்றின் தாதுக்களைப் பிரித்தெடுப்பது, சுத்திகரிப்பது என்பது மிகவும் கடினம், எனவே தான் இவற்றை அரிய வகை பூமி தனிமங்கள் என்ற அழைக்கின்றனர்.
பூமியில் இருந்து இவற்றை பிரித்து எடுப்பதற்கு அதிகளவிலான ஆற்றலை செலவிட வேண்டும். சீரியம், டிஸ்ப்ரோசியம், எர்பியம், யூரோபியம், காடோலினியம், ஹோல்மியம், லந்தனம், லுடீடியம், நியோடைமியம், பிரசோடைமியம், ப்ரோமீதியம், சமாரியம், ஸ்காண்டியம், டெர்பியம், துலியம், யெட்டர்பியம், யெட்ரியம் உள்ளிட்ட 17 உலோகத் தனிமங்கள்தான் அரிய வகை பூமி தனிமங்கள் ஆகும். இந்த தனிமங்கள்தான் தற்போது இந்தியாவில் அதிகளவில் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், ஸ்மார்போன்கள், மின்சார வாகனங்கள், போர் விமானங்கள், செயற்கைகோள்கள் என நவீன தொழில்நுட்பத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. மாசுபாட்டை குறைப்பதிலும், பாதுகாப்பு துறையிலும் இதன் பயன்பாட்டிலும் இவை மிகப்பெரிய அளவில் உதவும் என்பதாலேயே ஒவ்வொரு நாடுகளும் இதை கண்டறியவும், இதை தங்களின் கட்டுக்குள் கொண்டு வரவும் நினைக்கின்றன.
இப்போது இந்தியாவுக்கு இது மிகப்பெரிய புதையலாக கிடைத்திருக்கிறது, இதனால் இதில் சீனாவின் சர்வாதிகாரப்போக்குக்கு இந்தியா முட்டுக்கட்டை போடலாம். எலெக்ட்ரானிக்ஸ், பசுமை ஆற்றல் துறை, போக்குவரத்து துறை ஆகியவற்றில் தற்போது இந்தியா சீனாவை அதிகம் சார்ந்திருக்கிறது. ஆனால் இனி அந்த போக்கு குறையும்.
சிங்க்ரௌலி மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் அரிய வகை தனிமங்கள் இருக்கின்றன. 7.23 மில்லியன் டன் அரிய வகை தனிமங்கள் ஆக்ஸைட் (REO) காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆந்திர பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் இந்த அரிய வகை பூமி தனிமங்கள் தென்படுகின்றனர். இந்த தகவல்கள் அனைத்தும் மெய்யாகும்பட்சத்தில், இந்தியா உலகளவில் தன்னிகரற்ற நிலையை அடையும்.
Rare Earth Elements: சீனாவின் ஆதிக்கம்
எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரிகள், சோலர் பேனல்கள், மொபைல்கள், லேப்டாப்கள், பாதுகாப்பு துறை ஆகியவை பெரிதும் இந்த அரிய வகை தனிமங்களை சார்ந்து இருக்கின்றன. தற்போதைய சூழலில் சீனாதான் இதில் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகில் 90% அரிய வகை தனிமங்களை எடுப்பதும், அதை சுதிகரிப்பதும் சீனாதான். தற்போதைக்கு இதில் இருக்கும் பெரிய சவாலே விநியோகம்தான். ஏற்றுமதிக்கு தடை விதிப்பது, விலையை அதிகரிப்பது, புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை இதன் உலகளாவிய விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும் எனலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ