National News In Tamil: ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு 25 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மேற்கு வங்க அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

National News In Tamil: மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் பேருக்கான பணி ஆணைகளை ரத்து செய்து கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. இதனால், மம்தா பானர்ஜி தலைமயிலான மேற்கு வங்க அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மோசடி நடந்தது உறுதி...
மேலும் இந்த பணிகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்வதில் மோசடி நடந்துள்ளது என்றம் அதில் நம்பகத்தன்மை, சட்டப்பூர்வமான தன்மையே இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா மற்றும் நீதிபதி பிவி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில்,"உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட எவ்வித மூகாந்திரமும் இல்லை. மோசடி செய்து பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளது என்பதால், அவை முழுவதும் மோசடியாகும்.
8 வருட சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்
மூன்று மாத காலத்திற்குள் இந்த பணிகளுக்கான புதிய தேர்வு செயல்முறையை முடிக்குமாறு மேற்கு வங்க அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த புதிய தேர்வு செயல்முறையில் தேர்வு செய்யப்படுபவர்கள், 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதில் இருந்து பெற்ற சம்பளத்தை திருப்பித் தர தேவையில்லை. அதேநேரத்தில், புதிய தேர்வு செயல்முறையில் தேர்வாகாதவர்கள் 2016இல் இருந்து பெற்று வந்த சம்பளத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் சலுகை அளித்துள்ளது என்றும் தற்போதைய பதவியில் தொடரலாம் என்றும் கூறியுள்ளது.
சிறையில் இருக்கும் தலைவர்கள்
2016 ஆம் ஆண்டு மாநில அளவிலான இந்த தேர்வில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலியாக இருந்த பதவிகளின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 640. ஆனால் 25 ஆயிரத்து 753 நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த கூடுதலான நியமனங்களே சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கு இடமளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆசிரியர் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகள் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை அளித்தன. முன்னாள் கல்வி அமைச்சரும், மம்தா பானர்ஜியின் நம்பகமானவர்களாக இருந்தவர்கள், திரிணாமுல் காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் இந்த வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த முறைகேடு தொடர்பாக, 25 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களின் பணி நியமனங்களை ரத்து செய்து கல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்தாண்டே உத்தரவிட்ட நிலையில், மேற்கு வங்க அரசு உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மேலும், தவறு செய்தவர்கள் மற்றும் தவறு செய்யாத நபர்களை பிரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ