Hyderabad Fire Broke Out: ஹைதராபாத் நகரின் புகழ்பெற்ற சார்மினார் சுற்றுலா தலம் அருகே உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Hyderabad Fire Broke Out: முதற்கட்ட தகவல் என்ன?
முதற்கட்டமாக, மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது. இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இன்று காலை 6.30 மணிக்கு தீ விபத்து குறித்த தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.
11 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு, தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் வரிசையாக நகைக் கடைகள் இருக்கின்றன. மேலும் ஹைதராபாத்தின் வரலாற்றுச் சின்னமான சார்மினாருக்கு மிக அருகில் இந்த கட்டடம் உள்ளது.
Hyderabad Fire Broke Out: தீயணைப்பு துறையிடம் சரியான உபகரணங்கள் இல்லை...
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜி கிஷான் ரெட்டி கூறுகையில், "தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் குல்சார் ஹவுஸ் பகுதியில் உள்ள கடையின் மாடியில்தான் வசித்து வந்துள்ளனர். நான் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். இதுபோன்ற சம்பவங்கள் கவலையளிக்கிறது. நான் யாரை குற்றஞ்சாட்டவில்லை, ஆனால் காவல்துறை, மாநகராட்சி, தீயணைப்பு துறை, மின்சாரத்துறை ஆகியவை வலிமையாக இருக்க வேண்டும்.
இன்று, தீயணைப்பு வீரர்களிடம் ஆரம்பக் கட்டத்தில் சரியான உபகரணங்கள் இல்லை என்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நாம் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி குறித்து மத்திய அரசு மற்றும் பிரதமரிடம் பேசி பெற்றுத் தர முயற்சிப்பேன்" என்றார்.
Hyderabad Fire Broke Out: அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
விபத்து குறித்து பேசிய தெலங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர், "சம்பவ இடத்தில் உள்ள உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநில அரசு விரைவில் முழுத் தகவலையும் தெரிவிக்கும்" என்று கூறினார். தற்போது வரை இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை, விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hyderabad Fire Broke Out: பிரதமர் மோடி இரங்கல்
ஹைதராபாத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் மோடி அவரது X பக்கத்தில், "தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்திய ராணுவ ரகசியம்... பாகிஸ்தானுக்கு கசியவிட்ட பெண் யூ-ட்யூபர் அதிரடி கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ