தமிழ், மலையாளி, கன்னடன் என்பதை விட முதலில் நான் ஒரு இந்தியன்: கே. சிவன்

நான் தமிழ், மலயாளி, கன்னட் என்பதை விட, நான் முதலில் ஒரு இந்தியன். நான் ஒரு இந்தியனாக இஸ்ரோவில் சேர்ந்தேன் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறிய கருத்து வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2019, 07:43 PM IST
தமிழ், மலையாளி, கன்னடன் என்பதை விட முதலில் நான் ஒரு இந்தியன்: கே. சிவன் title=

புதுடெல்லி: ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. இந்த வெற்றியை நமது நாடு மட்டும் இல்லை உலகமும் கொண்டாடியது. அன்று நாடு முழுவதும் பொங்கல், தீபாவளி, ரமலான் பண்டிகையை கொண்டாடுவது போல கோலாகலமாக சந்திரயான் 2 வெற்றியை கொண்டாடப்பட்டது.

ஆனால் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1:55 மணி அளவில் சந்திரயான் 2-விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க ஆயுத்தம் ஆனது. நாடே அந்த தருணத்தை காண ஆவலாக தொலைக்காட்சி முன்பு குவிந்திருந்தார்கள். ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் விக்ரம் லேண்டர் நெருங்கி வந்த நிலையில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதுநாள் வரை கடினமாக உழைத்த நமது விஞ்ஞானிகள் தடுமாறி நின்றார்கள். அப்பொழுது நாட்டு மக்கள் அனைவரும் இஸ்ரோவின் பக்கம் நின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இதுவரை விக்ரம் லேன்டருடன் தொடர்பு கிடைக்கவில்லை. மேலும் இதற்காக அவர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனால்தான் இன்றும் நாட்டு மக்கள் இஸ்ரோ விஞ்ஞனிகளின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

அந்த கணத்தில் கண் கலங்கி நின்ற இஸ்ரோ தலைவர் சிவனை பிரதமர் மோடி கட்டியணைத்து தட்டிக் கொடுத்தார். இஸ்ரோ தலைவரின் இந்த கண்ணீர் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் உருக்கியது. 

அந்த நமது இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் கூறிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அந்த கருத்து 130 கோடி இந்தியர்களின் உள்ளங்களையும் வென்றுவிட்டது. 

அதாவது 2018 ஜனவரி மாதத்தில் இஸ்ரோ தலைவராக பதவியேற்ற பிறகு, ஒரு பிராந்திய செய்தி சேனலுக்கு சிவன் பேட்டி கொடுத்தார். அப்போது, ஒரு தமிழனான நீங்கள் இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறீர்கள். தமிழ்நாடு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர் கேட்டார்.
 
அதற்கு பதில் அளித்த அவர், நான் முதலில் உங்களுக்கு இதை சொல்லிகொள்கிறேன். நான் தமிழ், மலயாளி, கன்னட் என்பதை விட, நான் முதலில் ஒரு இந்தியன். நான் ஒரு இந்தியனாக இஸ்ரோவில் சேர்ந்தேன். வெவ்வெறு இடத்தை சேர்ந்த மக்கள், வெவ்வெறு மொழி பேசும் மக்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்யவும் மற்றும் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யும் இடம் தான் இஸ்ரோ. இங்கு எந்த ஒரு தனி மொழிக்கும் முக்கத்துவம் இல்லை. இங்கு நிறத்தின் வழியாகவோ மொழியின் வழியாகவோ வேறுபடுத்தி யாரும் பார்ப்பதில்லை. என்னைப் நம்பும் என் சகோதரர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனக் கூறினார்.

Trending News