)
IAF Chief AP Singh: இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழாவில் பேசிய, விமானப்படை தலைமை தளபதி அமர் பிரீத் சிங் அமெரிக்க தயாரிப்பான F-16 போர் விமானங்கள், சீன தயாரிப்பான JF-17 போர் விமானங்கள் உள்பட பாகிஸ்தானின் 8-10 போர் விமானங்களை இந்தியா தாக்கி அளித்தாக கூறினார். மேலும், இந்தியாவின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியவை அனைத்தும் பொய் என்றார். மேலும் அவை பாகிஸ்தானின் அருமையான கதை என்றும் விமர்சித்தார்.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மே மாதம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டது. மே மாதம் நடந்த இந்த ஆபரேஷனில் பாகிஸ்தான் தோல்வியுற்றதாக இந்தியா சர்வதேச அரங்கில் வாதிட்டு வருகிறது. அப்படியிருக்க, முதல்முறையாக பாகிஸ்தானின் தோல்வி குறித்து விரிவாக ஏர் மார்ஷல் ஏபி சிங் விவரித்துள்ளார்.
ஏர் மார்ஷல் ஏபி சிங் கூறுகையில், "300 கி.மீக்கும் அதிகமான தூரத்திற்கு ஒரு நீண்ட தூர தாக்குதலுக்கான தெளிவாக சான்றுகள் எங்களிடம் உள்ளன. அது ஒன்று SIGNIT விமானகவோ அல்லது AEW&C விமானமாகவோ இருக்கலாம். அத்துடன், F-16 போர் விமானம் மற்றும் JF-17 போர் விமானங்களில் ஐந்து உயர் தொழில்நுட்ப போர் விமானங்களும் வீழ்த்தப்பட்டிருக்கும்" என்றார்.
மேலும், "பாகிஸ்தான் பகுதிக்குள் 300 கி.மீ., தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தியதுதான் இந்திய விமானப்படை வரலாற்றில் அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்தியதாகும். மேலும் அதுதான் இந்திய விமானப்படையில் இந்தாண்டின் சிறப்பம்சமாகும்" என்றார்.
மேலும், பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ஓடுபாதைகள் மற்றும் போர் விமானங்கள் நிற்க வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மீது துல்லியமான தாக்குதல்களை இந்தியா மேற்கொண்டதில் மேலும் 4-5 F-16 போர் விமானங்கள் தரையிலேயே அழிக்கப்பட்டன என்றார்.
போர் விமானங்கள் மட்டுமின்றி, தரையில் நான்கு இடங்களில் இருந்த ரேடார்கள், இரண்டு இடங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், இரண்டு ஓடுபாதைகள், மூன்று விமானம் நிறுத்திவைக்கப்படும் பெரிய கட்டங்கள் மற்றும் ஒரு தரையில் இருந்து வானை நோக்கி தாக்குதல் தொடுக்கும் SAM ஏவுகணை அமைப்பு ஆகியவை மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக கூறினார்.
இவை அனைத்தும் மே 10ஆம் தேதி அன்று இந்தியா, பாகிஸ்தானுக்குள் உள்ள 11 ராணுவ விமான தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியபோது நடந்திருக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்காக இந்தியாவை அணுக வேண்டிய கட்டாயமும் இதனால் ஏற்பட்டது என்றும் இந்த விவரங்கள் விமானப்படையின் தாக்குதலுக்குப் பிந்தைய மதிப்பீடுகளின் ஒரு பகுதியாகும் என்றும் ஏபி சிங் கூறினார். பாகிஸ்தானுக்கு இது உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அதனால்தான் அவர்கள் போர் நிறுத்தத்தை நோக்கி வந்தார்கள் என்றும் ஏபி சிங் கூறினார்.
சில நாள்களுக்கு முன், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றியபோது, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஏழு இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியிருந்ததார். அதைத் தொடர்ந்து தற்போது ஏர் மார்ஷல் இதுகுறித்து பேசி உள்ளார். பாகிஸ்தானின் கூற்றுக்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்பது தனிக்கதை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ